டிஸ்மிஸ்- சஸ்பெண்ட்: அரசிடம் 3 நீதிபதிகள் குழு அறிக்கை சமர்பிப்பு
சென்னை:
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 5,314 ஊழியர்களையும்மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு அவர்களிடம் விசாரணை நடத்திய 3 நீதிபதிகள் குழு தமிழக அரசுக்குபரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
டெஸ்மா சட்டத்தின் கீழ் சுமார் 1.70 லட்சம் பேரை தமிழக அரசு சஸ்பெண்ட் மற்றும் டிஸ்மிஸ் செய்தது. இதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதையடுத்து 5,314 பேரைத் தவிர மற்றவர்களை மீண்டும்பணியில் சேர்த்துக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்த 5,314 பேரும் நேரடியாக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தை தூண்டிவிட்டதாகவும் கூறிவேலையில் சேர்க்க மறுத்தது. இதில் 2,800 பேர் தலைமைச் செயலக ஊழியர்கள். இதையடுத்து இவர்களிடம்விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தக் குழுவின் பரிந்துரைகள்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கடந்த இரு மாதங்களாக நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையை முடித்துக் கொண்ட நீதிபதிகள் நேற்று மாலை தங்களது பரிந்துரையை தமிழக தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேசிடம் சமர்பித்தனர்.
இந்த அறிக்கையில், 5.314 பேரையும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் சிபாரிசுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்கள் இன்னும் வெளியில் தெரிவிக்கப்படவில்லை.
நீதிபதிகளின் இந்த அறிக்கையை தலைமைச் செயலாளர் லட்சுமி, நிதித்துறைச் செயலாளர் நாராயணன், பணியாளர்சீர்திருத்தத்துறைச் செயலாளர் மெய்கண்டதேவன், பொதுத்துறைச் செயலாளர் ஆகியோர் இன்று ஆய்வு செய்வர்என்று தெரிகிறது. இதன் பின்னர் இந்த விஷயத்தில் முதல்வருடன் முடிவெடுபபார்.


Click it and Unblock the Notifications
