ஒயின் ஷாப் வேலையில் சேர வந்த பெண்கள்
சென்னை & ராமநாதபுரம்:
அரசு நடத்தவுள்ள மதுக்கடைகளில் வேலை தரக் கோரி ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தைபெண்கள் முற்றுகையிட்டனர். மதுக் கடைகளில் வேலை பார்க்கவும், ஊற்றித் தரவும் தாங்கள் தயார் என அவர்கள்தெரிவித்தனர்.
அரசு மதுக்கடைகளுக்கு 22,000 ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. அரசுஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது தற்காலிக ஊழியர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 15,000 பேரை இந்தமதுக்கடைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அரசு விரும்புகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 பேர் வீதம் உள்ள தற்காலிகப் பணியாளர்கள் விரும்பினால் மதுக்கடைவேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு வேலைக்கு வந்த தங்களை மதுக்கடைவேலைக்கு போகுமாறு அரசு கூறுவதால் இந்த தாற்காலிக ஊழியர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இது தவிர அரசு மதுக்கடைகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்கள், மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.50,000மும்,விற்பனையாளர் பதவியில் சேருபவர்கள் ரூ.15.000மும் டெபாஸிட் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.இதற்கு யாரும் முன் வராததால் ரூ. 5 லட்சத்துக்கு சொத்து மதிப்பை ஜாமீனாகக் காட்டி பணியில் சேரவாம் என்றுஅறிவித்துள்ளது.
தங்கள் பெயரில் எங்கிருந்து ரூ. 5 லட்சத்துக்கு சொத்து மதிப்பைக் காட்டுவது என்று தற்காலிக அரசு ஊழியர்கள்கலங்கிப் போயுள்ளனர்.
இந் நிலையில் மதுக்கடைகளில் வேலை செய்யத் தயார் என்று ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலகத்தில் பெண்கள் விண்ணப்பித்தனர். மதுக்கடைகளில் ஊற்றித் தர, மிக்ஸ செய்து தரவும் நாங்கள் தயார்என்று இவர்கள் கூறினர்.
ஆனால், இது ஆண்களுக்கான வேலை என்று அதிகாரிகள் இவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications