போலி வாக்காளர்களை சேர்க்க அதிமுக சதி: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடவும், கள்ள ஓட்டுக்கள் போடவும் அதிமுகதிட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடக்கும்போது போலி வாக்காளர்களைச் சேர்க்க திமுகதிட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அதிமுகவினருக்கு அவர்எழுதியுள்ள கடிதத்தில், திமுகவின் இந்த முயற்சியை முறியடிக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு பதிலடியாக ஜெயலலிதா தேர்தல் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கருணாநிதி குற்றம்சுமத்தியுள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
போலி வாக்காளர்களைச் சேர்க்க திமுக திட்டமுட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். பிறரையும் அவர்தன்னைப் போலவே நினைத்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
டான்சி வழக்கில், வாங்கப்பட்ட சொத்து குறித்து நீதிமன்றத்தில் மாறி, மாறி பேசிய ஜெயலலிதாவுக்குஅடுத்தவரைப் பற்றிக் குறை கூற என்ன அருகதை இருக்கிறது.
தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது, போலி வாக்காளர்களை சேர்ப்பது, கள்ள ஓட்டு போடுவது,முறைகேடுகளில் இறங்குவது, வாக்காளர்களை மிரட்டுவது இதெல்லாம் அதிமுகவினருக்கு கை வந்த கலை.
வரும் தேர்தலில் மீண்டும் இந்தச் செயல்களில் அதிமுகவினரை இறக்கிவிட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். மேலும்போலி வாக்காளர்களைச் சேர்க்கவும் அதிமுகவால் சதித் திட்டம் போடப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்தச் சதிச் செயலை முறியடிக்க திமுகவினர் இப்போதிருந்தே செயல்பட ஆரம்பித்தால் வரும்மக்களவைத் தேர்தலில் திமுக பெறும் வெற்றி பெரும்.
யானைகள் முகாம் என்ற பெயரில் யானைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த அரசு என்றார்கருணாநிதி.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications