சென்னைக்கு குடிநீர்: நாயுடுவுக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து 3டி.எம்.சி. தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் கடும்குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. தற்போது மிகவும் மோசமான நிலை உள்ளது.
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. அடுத்த மாதம் பாதிவரை மட்டுமே இந்த நீரை பயன்படுத்த முடியும்.
சென்னைக்கு, தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக முறைப்படி தண்ணீர்கிடைக்கவில்லை. கண்டலேறு அணையிலிருந்து 3 டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கடந்தமார்ச் மாதம் தமிழகம் கோரியது.
ஆனால் கண்டலேறு-பூண்டி இணைப்புக் கால்வாய் பணிகள் முடியாததைக் காரணம் காட்டி அதை ஆந்திர அரசுநிராகரித்து விட்டது. தற்போது இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே கண்டலேறு அணையிலிருந்து 3டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள தமிழகத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
சென்னை மக்களுக்கு குறைந்தபட்ச குடிநீரையாவது கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கூறியுள்ளார்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications