சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு மீண்டும் வேலை எப்போது?.: ஜெ. ஆலோசனை
சென்னை:
3 நீதிபதிகள் குழுவினரால் பணி நியமனம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு எப்போது பணிநியமன உத்தரவை வழங்குவது என்பது குறித்து முதல்வர் ஜெயலலிதா, உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனைநடத்தினார்.
வேலை நிறுத்தம் செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட 5,814 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம், 3 நீதிபதிகள்கொண்ட குழு விசாரணை நடத்தியது. விசாரணைக்குப் பிறகு முதல் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது.அதில், தலைமைச் செயலக ஊழியர்கள் 2,889 பேருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்குமாறுபரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மற்ற ஊழியர்கள் குறித்த அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. இந் நிலையில், 2,889 பேருக்கு மீண்டும்பணி நியமனம் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்,நிதித்துறைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைநடத்தினார்.
மற்ற ஊழியர்கள் குறித்த அறிக்கையும் தாக்கல் ஆன பின்னர் அனைவருக்கும் சேர்த்து மீண்டும் பணி நியமனம்வழங்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
முன்னதாக டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள்அடுத்த மாதம் முதல் மீண்டும் வேலைக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications