ரயில்வே கேங்மேன் தேர்வு எழுதிய பி.இ. பட்டதாரிகள்!
சென்னை:
ரயில்வே தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கேங்மேன், கலாசி பணியாளர்களுக்கான தேர்வில் பி.இ.பட்டதாரிகளும் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
ரயில்வே தேர்வு வாரியத்தால், தென்னக ரயில்வேயில், கேங்மேன், கலாசி போன்ற பணிகளுக்கு 1,681 பேரைத்தேர்ந்தெடுப்பதற்காக எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை தமிழகம் மற்றும் கேரளாவில் நடந்தது.
இதற்குய குறைந்த பட்சக் கல்வித் தகுதி 8-வது வகுப்பு தேர்ச்சி. ஆனால் பி.இ. படித்த பட்டதாரிகளும் கூட இந்தத்தேர்வில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 4.5 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2.6 லட்சம் பேர் மட்டுமேதகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. தமிழகம், கேரளம், கர்நாடகத்தில் மொத்தம் 14 மையங்களில்இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.
இவற்றில் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலிருந்துதான் அதிக அளவில் விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்துகொண்டனர். முதல் முறையாக ஆங்கிலம், இந்தி தவிர, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியமொழிகளிலும் கேள்வித் தாள்கள் அச்சடிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வுக்கு வெளியூர்களிலிருந்து சென்னைக்கு ஏராளமான விண்ணப்பதாரர்கள் வந்திருந்தனர். அவர்கள்அனைவரும் சனிக்கிழமை இரவு முழுவதிலும் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலேயே தங்கியிருந்தனர்.இதனால் ரயில் நிலையம் முழுவதும் நிரம்பி வழிந்தது.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications