லஞ்சம் வாங்கிய மத்திய அமைச்சர் திலிப் சிங் ராஜினாமா
டெல்லி:
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு சுரங்கத்தை குத்தகை தர அந் நிறுவனத்தின் தரகரிடம் லஞ்சம் வாங்கிய மத்தியசுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் தில்ப் சிங் ஜூடியோ இன்று ராஜினாமா செய்தார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அம் மாநில முதல்வராக இவரைத் தான் பா.ஜ.க.நிறுத்தியுள்ளது.
இந் நிலையில் அவர் லஞ்சம் வாங்கியதை கையும், களவுமாகக் காட்டும் வீடியோவை இந்தியன் எக்ஸ்பிரஸ்நாளிதழ் வெளியிட்டது.
இதையடுத்து அவர் ராஜினாமா செய்ய வேண்டும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ்உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால், முதலில் இதை ஏற்க பா.ஜ.க. மறுத்தது. இந்தவிஷயத்தில் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை என துணைப் பிரதமர் அத்வானி கூறினார். திலிப் சிங்கைகாப்பாற்ற முயற்சி நடந்தது.
ஆனால், மூன்று நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு டெல்லி திரும்பிய பிரதமர் வாஜ்பாய், அந்தவீடியோ உண்மையானதுதானா என்று ஆராயுமாறு உளவுத்துறைக்கு உத்தரவிட்டார். அதில் வீடியோஉண்மையானதே என்று தெரிய வந்ததால், திலிப் சிங்கை பதவி விலகுமாறு வாஜ்பாய் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று திலிப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த வீடியோவில் பேசும் திலிப் சிங், நான்சட்டீஸ்கர் முதல்வராகிவிட்டால் அந்த மாநிலத்தில் உள்ள சுரங்கத்தை உங்களுக்கு குத்தகைக்கு விடுவதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்று கூறுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டினால் சட்டீஸ்கர் மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்றுகூறப்படுகிறது.
திலிப் சிங் இணையமைச்சராக உள்ள சுற்றுச்சூழல் துறைக்கு திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு தான் கேபினட்அமைச்சராக உள்ளார். ஆனால், திலிப் சிங்கை பாலு தட்டியே வைத்திருந்தார். அவருக்கு முக்கிய பொறுப்புகள்எதையும் பாலு தரவில்லை.
இந் நிலையில் அவரை முதல்வர் பதவிக்கு பா.ஜ.க. நிறுத்தியதால், சட்டீஸ்கர் மாநில சுரங்கத்தைப் பெற அவரதுஆதரவை இப்போதே பெற்றுவிட லஞ்சத்தைத் தந்தது ஆஸ்திரேலிய நிறுவனம்.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டீஸ்கர் முதல்வர் அஜீத் ஜோகி தான் திட்டமிட்டு இந்த சதியைச்செய்து தன்னை மாட்டிவிட்டுள்ளதாக திலிப் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே இந்த வீடியோவை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரின் வீட்டின் மீது நேற்றிரவுபா.ஜ.கவினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னதாக பா.ஜ.க. தலைவராக இருந்த பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கியதை தெகல்கா நிறுவனம்வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டது. இதையடுத்து அவர் பதவி விலகினார். ஆனால், இதையடுத்து தெகல்காநிறுவனத்தின் மீது வழக்குகளைப் போட்டு மத்திய அரசு நெருக்கடி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில், திலிப் சிங்கைக் கைது செய்யக் கோரி டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர். அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் சே.பாலகிருஷ்ணன், செயல் தலைவர் இளங்கோவன் ஆகியோரும்கலந்து கொண்டனர்.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications