நாடாளுமன்றம் கூட்டப்படுமா?: ரணில்- சந்திரிகா நாளை மீண்டும் சந்திப்பு
கொழும்பு:
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயுடன் பாதுகாப்புத் துறையை பகிர்ந்து கொள்ள முடியாது என அதிபர் சந்திரிகாமறுத்துள்ளார்.
அமைதி முயற்சிகள் மீண்டும் தொடர்வதற்காக சந்திரிகா பாதுகாப்புத் துறையை ரணிலுடன் பகிர்ந்து கொள்ளத்தயாராக இருப்பதாக வந்த செய்திகளை அதிபர் அலுவலகம் மறுத்துள்ளது
சந்திரிகாவின் செய்தித்துறை இயக்குனர் ஜனதாச பெரிஸ் இதைத் தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சகமும் ரணில்தலைமையிலான சமரசத் தீர்வுக்கான செயலகமும் ஒருங்கிணைந்து ஒரு கமிட்டி அமைத்துச் செயல்படலாம்என்றுதான் அதிபர் யோசனை கூறினார் என்றார் அவர்.
இந் நிலையில் சந்திரிகாவின் அலுவலக மூத்த அதிகாரி மனோ டிட்டவெல்லா, ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் மாலிக் சமரவிக்கிரமவைச் சந்தித்துப் பிரச்சனையை சுமூகமாகத் தீர்ப்பது குறித்து பேசினார்.
இதன்படி ரணில் தலைமையில் ஐக்கிய தேசிய முண்ணனி கட்சித் தலைவர்கள் சந்திரிகாவை நாளைச் சந்தித்துஅதிகாரப் பகிர்வு குறித்து பேச்சு நடத்த உள்ளார்கள். பட்ஜெட் தாக்கல் செய்ய பாராளுமன்றத்தைக் கூட்டுமாறுசந்திரிகாவை ரணில் கோரியிருந்தார்.
இந்தக் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றத்தை சந்திரிகா கூட்டுவாரா என்பதற்கான விடை நாளைய சந்திப்பில்தெரிய வரும். கடந்த ஒரு வாரத்தில் நடக்கும் இரண்டாவது சந்திப்பு இதுவாகும்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications