யானைகள் ஓய்வு முகாம் தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

கோவில் யானைகளின் ஓய்வு முகாம் முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாத காலத்திற்கு முதுமலை வனப்பகுதியில் ஓய்வளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ளகோவில்களிலிருந்து 120 யானைகளை முதுமலைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.

ஆனால் பல யானைகள் லாரிகளில் ஏற மறுத்து முரண் பிடித்தன. இதனால் திட்டமிட்டபடி யானைகளைமுதுமலைக்குக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பல யானைகளை அடித்தும், கயிற்றால் இழுத்தும்பார்த்தனர், ஆனால் யானைகள் மசியவில்லை. இதையடுத்து 55 யானைகள் மட்டுமே முதுமலைக்கு கொண்டுவரப்பட்டன.

முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் புத்துணர்ச்சி மையத்தில் ஓய்வு முகாம் நேற்று தொடங்கியது. இந்துஅறநிலையத் துறை அமைச்சர் பி.சி.ராமசாமி, வனத்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில்கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தனர்.

55 யானைகள் தவிர ஏற்கனவே இந்த முகாமில் உள்ள 26 யானைகளும், பொள்ளாச்சி டாப் ஸ்லிப்பில் உள்ள 20யானைகளும் ஓய்வு முகாமில் கலந்து கொண்டுள்ளன.

ஒரு மாத காலம் நடக்கவுள்ள இந்த முகாமில் கலந்து கொண்டுள்ள யானைகளுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் உணவுவகைகளும், தடுப்பு ஊசிகளும் கொடுக்கப்படவுள்ளன.

இதற்கிடையே, இந்த புத்துணர்ச்சி முகாம் சட்ட விரோதமானது என்று கூறி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த உயிர்ச்சூழல் மண்டல பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்திற்கு புகார் மனு அனுப்பியுள்ளது.

இந்த அமைப்பின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள மனுவில், மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதிபெறாமல் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும்.

மேலும், 30 நாட்களுக்கு மட்டும் லேகியம் கலந்த சத்துணவைக் கொடுப்பதால் யானைகளுக்கு புத்துணர்ச்சி வந்துவிடாது. எனவே இந்த முகாமைத் தடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+