சந்திரிகா- ரணில் மீண்டும் சந்திப்பு: இணைந்து செயல்பட குழு அமைப்பு
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இன்று மீண்டும் சந்தித்து பேச்சுநடத்தினர். அப்போது தேசியப் பிரச்சனைகளில் இருவரும் இணைந்து செயல்படுவது குறித்து புதிய திட்டம் வகுக்கஅதிகாரிகள் கொண்ட ஒரு குழுவை அமைக்க இருவரும் முடிவு செய்தனர்.
இலங்கையில் சந்திரிகாவால் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியையடுத்து, நார்வே அமைதிக் குழு நாடுதிரும்பிவிட்ட நிலையில், புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் கேள்விக் குறியாக உள்ள சூழலில் இந்தச் சந்திப்புநடந்தது.
கடந்த வாரம் இருவரும் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது. இதையடுத்து இருவரும் தங்கள் பிரதிநிதிகளைசந்திக்க வைத்தனர். இந் நிலையில் சந்திரிகாவின் அழைப்பையேற்று மீண்டும் இன்று ரணில் அவரைச் சந்தித்தார்.திட்டமிட்டதைவிட ஒரு மணி நேரம் தாமதமாகவே இந்தச் சந்திப்பு தொடங்கியது.
ஒன்றரை மணி நேரம் நடந்த இச் சந்திப்புக்குப் பின் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், எதிர்காலத்தில் அதிபரும் பிரதமரும் தேசிய விவகாரங்களில் முரண்பாடில்லாமல், கூட்டாக செயல்படும் வகையில்திட்டம் வகுக்க அதிகாரிகள் குழு ஒன்று நியமிக்கப்படுகிறது.
அதிபரும் பிரதமரும் இரு வாரங்களில் மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்துவர் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. முதலில்தங்களுக்கிடையிலான அதிகாரச் சண்டையைத் தீர்த்துவிட்டு அமைதிப் பேச்சு குறித்து பின்னர் முடிவு செய்யலாம்என இருவரும் தீர்மானத்துள்ளதாகத் தெரிகிறது.
ராணுவத்துறை, உள்துறையை தன் அமைச்சர்கள் வசம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என ரணில் கோரிவருகிறார். இதை சந்திரிகா ஏற்க மறுத்து வருகிறார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications