20 வருடமாக பென்ஷனுக்காக போராடும் தியாகி!
சென்னை:
20 வருடமாக தியாகிகள் பென்ஷன் கேட்டுப் போராடி வரும் 80 வயது சுதந்திரப் போராட்ட தியாகிக்குஉடனடியாக பென்ஷன் வழங்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் அப்பாராஜ். இவர் கடந்த 1942ம் ஆண்டு நடந்த வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தவர். அவரைக் கைது செய்ய ஆங்கிலேய போலீஸார் அப்பாராஜைத் தேடினர்.
இதைத் தொடர்ந்து அப்பாராஜ், முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், அந்தோணி பிள்ளைஉள்ளிட்ட சிலர் தலைமறைவாகி விட்டனர். நாடு சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 1982ம்ஆண்டு தியாகிகள் பென்ஷன் கேட்டு அப்பாராஜ் விண்ணப்பித்தார்.
தனது விண்ணப்பத்தோடு அந்தோணி பிள்ளை கொடுத்த சான்றிதழையும் இணைத்திருந்தார். ஆனால் சிறைவாசம்பெற்றவர்களுக்கு மட்டுமே பென்ஷன் வழங்கப்படுவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது.
இருப்பினும், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டு தலைமறைவாகஇருந்தவர்களுக்கும் பென்ஷன் தருவதற்கான திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், அது இறுதியானவுடன்பென்ஷன் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அப்பாராஜுக்கு தகவல் அனுப்பியது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்த தகவல் பரிமாற்றம் நடந்து கொண்டுள்ளது. இதையடுத்து, சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அப்பாராஜ். இவரது மனுவை விசாரித்த நீதிபதி முருகேசன், சிறு சிறுகொள்கை முடிவுகளால் இது போன்ற தியாகிகள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.
அப்படிச் செய்தால், பென்ஷன் திட்டம் அறிகப்படுத்தப்பட்டதற்கான நோக்கமே சிதைந்து போய் விடும். எனவேஅப்பாராஜுக்கு உடனடியாக பென்ஷன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications