2 வாரம் முடக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடியது
கொழும்பு:
இரு வாரகால முடக்கத்திற்குப்பின், இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது.
அதிபர் சந்திரிகா மூன்று மந்திரிகளின் பதவியைப் பறித்ததோடு, கடந்த 4ம் தேதி நாடாளுமன்றத்தையும் இருவாரங்களுக்கு முடக்கி வைத்தார். இதனால் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தடை ஏற்பட்டது.
இந் நிலையில் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் இருமுறை சந்தித்துப் பேச்சு நடத்தினர். இந் நிலையில் இரு வார காலமுடக்கம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று காலை நாடாளுமன்றம் கூடியது.
செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரைரா,
நாடாளுமன்றத்தை முடக்கி வைத்த சந்திரிகாவின் உத்தரவு சட்ட விரோதமானது. நாடாளுமன்றம் சம்பந்தமானமுடிவுகளை பிரதமருடன் கலந்தாலோசித்த பின்னர்தான் அதிபர் அறிவிக்கவேண்டும். ஆனால், தன்னிச்சையாகஅதிபர் இந்த முடிவை வெளியிட்டார்.
இதுபோன்று சந்திரிகா வருங்காலத்தில் செயல்பட மாட்டார் என நம்புகிறேன். அவ்வாறு செயல்பட்டால்,நாடாளுமன்றம் தானாகவே கூடி, செயல்படும் என்றார்.
இந்தியாவில் நார்கே குழு:
இதற்கிடையே இந்தியா வந்துள்ள நார்வே அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம், இந்திய வெளியுறவுச் செயலாளர்கன்வால் சிபலைச் சந்தித்து இலங்கை அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை, அந் நாட்டுஅரசியல் சூழல் குறித்து விளக்கினார்.
இச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கன்வால் சிபல்,
சந்திரிகாவும், ரணிலும் தங்களுக்கு இடையிலான அரசியல் பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் தீர்வு காணமுயலவேண்டும். அதன்மூலம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவேண்டும்.
இலங்கை அரசியலில் நிலவும் நெருக்கடி காரணமாகவே சமரச முயற்சியிலிருந்து நார்வே தூதுக்குழு தற்காலிகமாகவிலகியுள்ளது. நிலைமை சீரானவுடன், அவர்கள் மீண்டும் சமரச முயற்சியில் பங்கு பெறுவார்கள்.
இலங்கையில் அமைதி நிலவவேண்டும். அதற்காக அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்படவேண்டும்என்பதே இந்தியாவின் விருப்பமாகும். தற்போது நிலவும் தேக்கநிலைக்கு பரஸ்பர நம்பிக்கையின்மையே காரணம்என்றார் அவர்.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications