மனைவியை விபச்சார விடுதியில் விற்ற கணவன்: உடந்தையாக இருந்த மாமியார்
தென்காசி:
இளம் மனைவியை ரூ. 25,000க்கு மும்பை விபச்சார விடுதியில் விற்ற கணவனையும், அதற்கு உடந்தையாகஇருந்த அவரது அம்மாவையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் மாணிக்கம்புதூரைச் சேர்ந்தவர் யோசப்ராஜ்(26). இவர் மும்பையில் ஒரு அரசு நிறுவனத்தில்வேலை பார்ப்பதாகக் கூறி, நெல்லையைச் சேர்ந்த செவத்தியம்மாள் (22) என்பவரை கடந்த ஆண்டு திருமணம்செய்து கொண்டார்.
திருமணத்திற்கு ரூ.20,000 பணமும், 20 பவுன் தங்க நகையும் வரதட்சணையாக வாங்கியுள்ளார். கல்யாணம் முடிந்தமறுநாளே வேலையிருப்பதாகக் கூறி, மும்பைக்குத் தனது மனைவி செவத்தியம்மாளை யோசப்ராஜ் அழைத்துச்சென்றுவிட்டார்.
அங்கு 2 மாதம் குடும்பம் நடத்திய யோசப்ராஜ், ஒரு நாள் செவத்தியம்மாளை மும்பை சிவப்புப் பகுதியிலுள்ளஒருவீட்டுக்கு அழைத்துச் சென்று, விட்டு விட்டு வந்துவிட்டார். பாலியல்ரீதியில் பயங்கரமாககொடுமைப்படுத்தப்பட்ட அவர் அங்கிருந்து ஒரு வாரத்துக்கு முன் தப்பித்து நெல்லை திரும்பினார்.
தன்னை கணவன் விபச்சார விடுதியில் விற்றது குறித்து செங்கோட்டை ஜூடிசியல் மாஜிஸ்டிரேட் ஆனந்திடம்புகார் கொடுத்தார். புகாரில் தன்னை யோசப்ராஜ் விபச்சார விடுதியில் விற்றதாகவும், அதற்கு யோசப்ராஜின்தாயார் மைக்கேல்ராணி, அவருடைய உறவினரான வள்ளியூர் பழவூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், கேரளாஆரியங்காட்டைச் சேர்ந்த ஈசாக் ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications