அரவாணிகளுக்கு வீடுகள் வழங்கிய கலெக்டர்!
சென்னை:
வேலூர் மாவட்டம் ஆத்து மோட்டூர் என்ற கிராமத்தில் அரவாணிகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் தொகுப்புவீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
அரவாணிகளுக்காக தனியாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருப்பது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.பிரதமரின் கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தக் குடியிருப்பில் 100க்கும் மேற்பட்ட அரவாணிகள் வசிக்கவுள்ளனர். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில்உள்ளனர். மொத்தம் 20 வீடுகள் இங்கு உள்ளன. குடிநீர், கழிப்பறை என அத்தனை வசதிகளும் இந்தக்குடியிருப்பில் உள்ளது.
அரவாணிகளுக்குத் தொழிற் பயிற்சி தருவதற்கான பயிற்சி நிலையம், இந்தக் குடியிருப்புக்கு அருகேஉருவாகவுள்ளது. ஏற்கனவே பேப்பர் பைகளைத் தயாரிப்பது எப்படி என்பது குறித்து அரவாணிகளுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது. அவற்றை விற்பனை செய்வதற்கான உதவி மையம், இந்த பயிற்சி மைய வளாகத்தில்அமைக்கப்படவுள்ளது.
இதுதவிர காட்பாடி உழவர் சந்தையில் அரவாணிகள் தயாரிக்கும் பேப்பர் பைகளை விற்பனை செய்வதற்காகஇரண்டு கடைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன்தாஸ் குடியிருப்பு குறித்துக் கூறுகையில், வீடுகள் மட்டுமல்லாது, இவர்கள்சொந்தமாக தொழில் செய்து சமூகத்தில் மற்றவர்களைப் போலவே சம அந்தஸ்துடன் வாழ வழி செய்துள்ளோம்.
அரவாணிகளுக்காக ரேஷன் கார்டுகள் கொடுக்கவும், கல்வி கற்பதற்கான வசதிகள் ஏற்படுத்தவும் தனி கவனம்எடுத்து செய்யப்பட்டுள்ளது என்றார்.
குடியிருப்பைக் கட்ட பெரிதும் உதவிய மோகன்தாஸைப் பாராட்டும் விதமாக அவரது பெயர் இந்தக்குடியிருப்புக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications