அமைதி பேச்சு: சந்திரிகாவுடன் இணைந்து செயல்பட தயார்- ரணில்
கொழும்பு:
புலிகளுடனான அமைதிப் பேச்சு வார்த்தையில் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவிற்கு முக்கிய இடம்அளிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
அதிபருக்கும், பிரதமருக்கும் இடையேயான அதிகாரச் சண்டையைத் தீர்க்கும் விதமாக இந்த முடிவுஎடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளார் ஜி.எல்.பெரீஸ்,
அரசியல் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து, நடந்ததை மறந்து விட்டு. எங்கள் இலக்கான அமைதிப்பேச்சுவார்த்தையை நடத்துவதற்கான நியாயமான வழிமுறைகளைக் கண்டறிவதில் கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளோம்.
அதன் ஒரு முயற்சியாகத்தான் அதிபருடன் இணைந்து பணியாற்ற முன் வந்துள்ளோம். அதிபருக்கும், அவரதுகட்சிக்கும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேச்சுவார்த்தையில் இடமளிப்பது அவசியம் என்பதைஉணர்ந்துள்ளோம்.
முன்பு அதிபரின் துணையின்றி அமைதிப் பேச்சு நடந்தது என்றால், அப்போது இருந்த நிலைமை வேறு, இப்போதுஉள்ள நிலைமை வேறு.
இடைக்கால நிர்வாகம் சம்பந்தமாக தற்போது புலிகள் விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி முக்கிய முடிவுஎடுக்கும்போதும், அதன் தொடர்ச்சியாக அரசியல் சட்டத்தைத் திருத்தும்போதும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளஅவர்களது கருத்தையும், ஆதரவையும் பெறுவது இன்றியமையாததாகும்.
மேலும், அதிபருக்கும், பிரதமருக்கும் பொறுப்புகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக இந்த வாரம் ஏற்படுத்தப்பட்டநான்கு நபர் குழு இது வரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வாறுநடத்தப்பட வேண்டும் என்பதில் சந்திரிகாவின் கருத்தை அறிய ரணில் ஆர்வமாக உள்ளார் என்றார்.
ரணிலின் இந்த முடிவு குறித்து அதிபரின் செய்தித் தொடர்பாளர் ஜனதாஸ் பெரீஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த முடிவு ஒரு நல்ல முன்னேற்றமாகும். சந்திரிகா அமைதிப் பேச்சுவார்த்தையில் ரணிலுடன் இணைந்துசெயலாற்றுவதில் எப்போதும் ஆர்வத்தையும், பேச்சுவார்த்தை மேலும் தொடர்வதில் தனக்குள்ள விருப்பத்தையும்வெளிப்படுத்தி வந்துள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications