தொடர்கிறது விபச்சார வேட்டை: நடிகை, தாயார் உள்பட 8 பெண்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விபச்சாரத்தில் ஈடுபட்ட சினிமா துணை நடிகையான ஷாலினி என்பவர் கைது செய்யப்பட்டார். இவர்பாண்டியராஜனின் படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை விருகம்பாக்கத்தில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், விபச்சாரத் தடுப்புப்போலீஸார் அங்கு மாறு வேடத்தில் நுழைந்தனர்.

அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடிகை ஷாலினி, ஷாலினியின் தாயார் விஜயா, சாண்டி என்றபெண், மற்றும் 2 ஆண்கள் பிடிபட்டனர்.

நடிகை ஷாலினி, பாண்டியராஜன் நடிக்கும் ஆண்புத்தி என்ற படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்துவருகிறாராம். ஏகப்பட்ட மலையாளப் படங்களிலும், பலான படங்களிலும் நடித்துள்ளாராம்.

இதேபோல் கோடம்பாக்கம் பாளையக்காரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக வந்ததகவலையடுத்து, போலீஸார் அந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திவ்யா,பாத்திமா, ஸ்ரீஷா ஆகிய பெண்களும், அவர்களின் புரோக்கரான ஜபீர் என்ற ரமேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

குரோம்பேட்டை ராதாகேர் பாஷ்யம் தெருவிலுள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் செய்து வந்த மூலக்கடை முத்துமாரியம்மன் தெருவைச் சேர்ந்த தேவி (31), அனகாபுத்தூர் வினோபா தெருவைச் சேர்ந்த லதா (35), மதுரையைச்சேர்ந்த பாக்கியம் (20) ஆகியயோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு உடந்தையாக இருந்த கண்ணன், சிவானந்தம், குமார், சேவியர், கணேஷ் ஆகியோரையும்போலீஸார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+