பெங்களூர் செல்லும் ஜெயலலிதா, சசிகலாவின் ரூ. 4 கோடி நகைகள்- சொகுசு பஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, சென்னை தனி நீதிமன்றத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பான ஆவணங்களை, பெங்களூரில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்குஅனுப்பும் ஆரம்பப் பணிகள் தொடங்கியுள்ளன.

ஜெயலலிதா, சசிகலா, தினகரன், சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான ரூ. 66.65 கோடி சொத்துக் குவிப்பு வழக்குஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக ஆட்சியின்போது ஏ.ஆர். ரஹ்மான், கங்கை அமரன் ஆகியோரும் முன்புசென்னை தனி நீதிமன்றத்தில் சாட்சியளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சுதாகரன் திருமணத்துக்கு இசைக்கச்சேரி நடத்தியது தொடர்பாக ரஹ்மானும், கங்கை அமரனுக்குச் சொந்தமான பண்ணை வீட்டை சசிகலாதரப்பினர் மிரட்டி அடிமாட்டு விலைக்கு ஸ்வாகா செய்தாக எழுந்த குற்றச்சாட்டையடுதத்து அமரனும் சாட்சிகளாகசேர்க்கப்பட்டனர்.

அதிமு ஆட்சி வந்த பின்னர் நீதிமன்றத்தை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் ஒரு பொருட்டாகவேமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் விசாரணைரக்கு அழைக்கப்பட்ட மாஜி வளர்ப்பு மகன்சுதாகரன், கேட்ட கேள்விக்கு எல்லாம் நான் ஷேர்களை வாங்கி விற்றேன் என்று மட்டுமே பதில் தந்தார்.

உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா என்ற கேள்விக்குக் கூட நான் ஷேர் வாங்கி வித்தேன் என்று அசால்டாக பதில்சொல்லி நீதிமன்றத்தையே கேலிக்குறியாக்கியது நினைவுகூறத்தக்கது.

அதே நேரத்தில் அரசுக்கு பயப்படாமல் இந்த வழக்கில் சாட்சி சொன்னவர், இந்த வழக்கை விசாரித்த எஸ்.பி.நல்லம்ம நாயுடு மட்டுமே. ஆனால், இன்னொரு விசாரணை அதிகாரியான கதிரேசன் முழு பல்டி அடித்து ஜெ.-சசிக்கு ஆதரவாக சாட்சி சொன்னார். அவருக்கு பதவி உயர்வு தரப்பட்டது.

இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த மாநில அரசுக்குஇன்னும் உச்ச நீதிமன்றப் பதிவாளரிடம் இருந்து முறையான உத்தரவு வந்து சேரவில்லை.

ஆனாலும், தனி நீதிமன்றத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் ஆரம்பத்திவிட்டன.ஓரிரு நாட்களில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது வந்தவுடன் கர்நாடக தலைமை நீதிபதி ஜெயின் மற்றும் அரசின் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனைநடத்தி நீதிமன்றத்துக்கு இடம், நீதிபதி, வழக்கறிஞர் நியமனப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக முதல்வர்கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இதையடுத்து 6 வாரங்களுக்குள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிடும்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள தமிழக அரசும், சென்னை தனி நீதிமன்றமும்,இவ் வழக்குத் தொடர்பான ஆவணங்களை பெங்களூரில் அமைக்கப்படவுள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளன.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்குச் சொந்தமான ரூ. 4 கோடி மதிப்புள்ள தங்க, வைர, வெள்ளி நகைகளும்,பல லட்சம் மதிப்புள்ள சொகுசு பஸ் ஆகியவையும் சாட்சியங்களாக உள்ளன. தற்போது சென்னை ரிசர்வ்வங்கியில் இந்க நகைகள் வைக்கப்பட்டுள்ளன.

விசாரணைக்குத் தேவைப்பட்டால் பெங்களூர் ரிசர்வ் வங்கிக்கு இந்த நகைகள் மாற்றப்படும் என்று தெரிகிறது.அதே போல பஸ்சும் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படலாம்.

அதே நேரத்தில் வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் தமிழில் இருப்பதால், பெங்களூருக்கு அதை ஆங்கிலத்தில்மொழி பெயர்த்து அனுப்ப வேண்டிய நிலை வரலாம். மொழி பெயர்ப்பு செய்கிறோம் என ஆவணங்கள் தருவதில்தமிழகம் கால தாமதம் செய்யுமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+