விடைபெற்றார் விஜயக்குமார்... பொறுப்பேற்றார் நட்ராஜ்
சென்னை:
சென்னை மாநகரக் காவல்துறையின் புதிய கமிஷ்னராக ஆர். நட்ராஜ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதுவரை இந்தப் பதவியில் இருந்து வந்த விஜயக்குமார், தனது பொறுப்புக்களை நட்ராஜிடம் இன்றுஒப்படைத்துவிட்டு விடைபெற்றார். அவருக்கு காவல்துறை உயர் அதிகாரிகளும், பத்திரிக்கையாளர்களும்பாராட்டு தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
ஈரோடு விரையும் விஜய்குமார் அங்கு நட்ராஜ் வகித்து வந்த, வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள கூட்டுஅதிரடிப் படையின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார்.
பதவியேற்ற பின் ஆணையர் நட்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை நகர காவல்துறை ஆணையர்பொறுப்பு மிகவும் பெருமை வாய்ந்த பதவியாகும். இந்தப் பொறுப்புக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
கமிஷ்னர் விஜயக்குமார் விட்டுச் சென்ற பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். குறிப்பாக ரெளடிகளைவேரறுக்கும் பணி தொடரும். அதேபோல, குற்றப் புலனாய்வு நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் தமிழக காட்டு எல்லைக்குள் இல்லை. இருப்பினும் தமிழக காட்டு எல்லைகளில் தீவிரகண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கர்நாடகத்தின் ஒத்துழைப்பு கிடைக்குமா?
இதற்கிடையே அதிரடிப்படைத் தலைவாகும் விஜய்குமாருக்கு கர்நாடக அதிரடிப்படையிடம் இருந்து போதியஒத்துழைப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் இந்து ஆசிரியர் ராமின் காரை தமிழக போலீசார் வழி மறித்து சோதனையிட்ட விஷயத்தில்விஜய்குமார் மீது கர்நாடக காவல்துறை தலைமையும் முதல்வர் கிருஷ்ணாவும் கடுப்பில் உள்ளனர்.
பெங்களூர் போலீசாரின் அனுமதியைப் பெறாமலேயே கர்நாடகத்தில் வந்து அத்துமீறி நடந்து கொண்டதாகதமிழக போலீசார் மீது கோபம் நிலவுகிறது. இது தொடர்பாக வழக்கும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அதிரடிப்படையின் தலைவராகும் விஜய்குமாருக்கு எந்த அளவுக்கு கர்நாடக காவல்துறையின்ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.
-
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications