அழகிரியை கைது செய்ய வாரண்ட்: நீதிமன்றம் அதிரடி!
மதுரை:
திருட்டு விசிடி வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியைக் கைது செய்ய வாரண்ட்பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி கைதான சில நாட்களில், மதுரை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையவளாகத்தில் அழகிரி வைத்துள்ள வீடியோ கடையில் போலீஸார் சோதனை நடத்தினர்.
கடையில் அனுமதியில்லாத ஆயிரக்கணக்கான விசிடிக்கள் இருந்ததாகக் கூறிய போலீஸார் இது தொடர்பாகஅழகிரி, அவரது கடை மேலாளர் தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் இந்தவழக்கில் பின்னர் ஜாமீனில் விடுதலை ஆகினர்.
இந் நிலையில் இந்த வழக்கு ஐந்தாவது குற்றவியல் நீதிபதி இந்திராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போதுதாமோதரன் மட்டுமே ஆஜரானார். உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அழகிரியால் ஆஜராக முடியவில்லைஎன்று அவரது வக்கீல் நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, டிசம்பர் 12ம் தேதி அழகிரி கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் கைதுசெய்ய போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கைது வாரண்ட்டை பிறப்பித்தார்.
தா.கி. கொலையில் கைதான அழகிரி இப்போது நிபந்தனை ஜாமீனில் வேலூரில் உள்ளார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications