ஜனனியை மகளிர் காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவு: போலீசுக்கு கடும் சாட்டையடி
சென்னை:
உயர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நடராஜனின் தோழியான ஜனனியை, சென்னை அரசினர் மகளிர்காப்பகத்தில் 25ம் தேதி வரை தங்க வைக்க நீதிபதி கற்பக விநாயகம் உத்தரவிட்டார். இதையடுத்து பலமாதங்ளுக்குப் பின் சிறைக்கு வெளியே தங்கியுள்ளார் ஜனனி.
ஜாமீன் கோரி சென்னை உயர்நீ திமன்றத்தில் ஜனனி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதானவிசாரணை தொடர்பாக ஜனனியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தச் சொன்னார் நீதிபதி கற்பக விநாயகம்.இதையடுத்து போலீசாரின் இழுத்தடிப்புக்குப் பின் நேற்று பிற்பகலில் நீதிபதி முன் ஜனனி ஆஜர் செய்யப்பட்டார்.
அப்போது போலீசாரை ஒரு பிடி பிடித்த நீதிபதி, ஒரு பெண்ணை நள்ளிரவில் போய் கைது செய்வீர்கள். ஆனால்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மட்டும் நேரம் பார்ப்பீர்களா என்றார். போலீசார் நெளிந்தபடி நின்றிருந்தனர்.
பின்னர் ஜனனியிடம் நீதிபதி கேள்விகள் கேட்க ஆரம்பித்தவுடன், கண்ணீர் விட்ட ஜனனி, நான் உங்களிடம்தனியே சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன் என்றார்.
பின்னர் நீதிபதி ஒரு கடிதத்தைக் காட்டி இதில் கூறப்பட்டுள்ளது உண்மையா என்று ஜனனியிடம் கேட்டார்.
அதை வாங்கிப் படித்துப் பார்த்த ஜனனி கதறி அழ ஆரம்பித்தார்.
நான் அப்படிப்பட்டவள் அல்ல என்று கூறிக் கொண்ட ஜனனி கட்டுப்படுத்த முடியாமல் அழ ஆரம்பித்தார்.இதையடுத்து அவரிடம் பேசிய நீதிபதி, இங்கே எதையும் கூற வேண்டாம், என் அறைக்குச் சென்று உங்களதுமனதில் உள்ள அத்தனையையும் எழுதித் தாருங்கள்.
கடிதத்தை வரி விடாமல் படித்து அதில் உள்ள ஒவ்வொன்றிற்கும் உரிய பதிலை எழுதுங்கள். உண்மையில் என்னநடந்தது, இதற்குப் பின்னணி என்ன என்பதை நான் அறிய விரும்புகிறேன். அதனால் இந்த வாய்ப்பைத்தருகிறேன் என்று கூறிய நீதிபதி ஜனனியைத் தனது அறைக்கு அழைத்துச் சென்று எழுதுவதற்கான ஏற்பாடுகளைச்செய்யுமாறு தனது உதவியாளருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் மாலை 4 மணியளவில் தனது அறையில் வைத்து ஜனனியிடம் ரகசிய விசாரணையும் நடத்தினார்.அப்போது வழக்குத் தொடர்பாக பல முக்கிய விவரங்களை ஜனனி நீதிபதியிடம் கூறியதாகத் தெகிறது.
கஞ்சா வழக்கு தன் மீது ஜோடிக்கப்பட்டது முதல் மதுரையில் முதல் நாளே கைது செய்துவிட்டு அடுத்த நாள் வரைஅதை நீதிமன்றத்தில் சொல்லாமல் சென்னைக்குக் கொண்டு வந்து போலீசார் விசாரித்தது வரை எல்லாவற்றையும்ஜனனி கூறியிருப்பதாகத் தெரிகிறது.
பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஜனனியை, சென்னைமயிலாப்பூரில் உள்ள அரசினர் மகளிர் காப்பகத்தில் தங்க வைக்குமாறு உத்தரவிட்டார்.
போலீசார் மீது வழக்கு?
மதுரை போலீஸ் கமிஷனர் விஜயக்குமாரும் நேற்று நீதிபதி முன் ஆஜரானார். அவரிடம் நீதிபதி கற்பகவிநாயகம்சரமாரியாகக் கேள்விகள் கேட்டார். ஆனால் ஒரு கேள்விக்கும் சரியான பதில் கொடுக்க முடியாமல் திணறித்தவித்தார் விஜயக்குமார்.
விசாரணையின்போது நீதிபதி, ஒரு பெண்ணை இரவில் கைது செய்துள்ளீர்கள், தொடர்ந்து சென்னைக்குக் கொண்டுசென்று விட்டு பின்னர் மீண்டும் மதுரைக்குக் கொண்டு வந்துள்ளீர்கள். கைது செய்த பின் அவரை மாஜிஸ்திரேட்முன்பு ஆஜர்படுத்தவில்லை.
பெண்ணைக் கைது செய்வதற்கு முன்பு கடைப்பிடிக்க வேண்டிய உச்ச நீதிமன்ற வழிமுறைகள் உங்களுக்கு ஏதாவதுதெரியுமா? என்று கடுமையாகக் கேட்டார். கமிஷ்னர் விஜய்குமார் திருதிருவென முழித்தார்.
ஐபி.எஸ். அதிகாரியான உங்களுக்கு சட்டம் தெரியாதா?, இந்தப் பெண் (ஜனனி) மீது வழக்குப் போடுவதிலும்,கைது செய்வதிலும் அவ்வளவு அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன? பின்னணி என்ன என்று கேட்டநீதிபதி, கோர்ட் ஊழியரைக் கூப்பிட்டு, ஒரு பெண்ணைக் கைது செய்யும்போது போலீசார் கடைப்பிடிக்க வேண்டியஉச்ச நீதிமன்ற வழிமுறைகள் தொடர்பான புத்தகத்தைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.
அந்தப் புத்தகத்தை முதலில் படியுங்கள் என கமிஷ்னர் விஜயக்குமாரிடம் கோபமாக நீதிபதி கூறினார்.
ஜனனியின் மதுரை வீட்டிலும், காரிலும் கஞ்சா எடுத்ததாக சொல்கிறீர்கள். ஆந்திராவில் இருந்து அவருக்கு கஞ்சாவந்ததாக குற்றப் பத்தரிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆந்திராவுக்குச் சென்று போலீசார் விசாரித்தார்களா?கஞ்சா விற்று ஜனனி பணம் சேர்த்ததாக நீங்களாக எப்படி முடிவு செய்து கொண்டீர்கள்?
இரவோடு இரவாக கைது செய்து பல மாவட்டங்களைத் தாண்டி மதுரையில் இருந்து சென்னைக்கு கொண்டுவந்துள்ளீர்கள். எந்த மாவட்ட காவல்துறையிடமும் இதைத் தெரிவிக்கவில்லை. தூங்கக் கூட விடாமல் அந்தப்பெண்களை பாடாய் படுத்தக் காரணம் என்ன? என்று கேட்ட நீதிபதி தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்.
ஒரு கேள்விக்கும் விஜயக்குமாரால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் கோபமடைந்த நீதிபதி, எனதுகேள்விகள் ஒன்றிற்கும் உங்களால் பொருத்தமான பதிலைத் தர முடியவில்லை. நீதிமன்ற வழிமுறைகளில் ஒன்றைக்கூட நீங்கள் பின்பற்றவில்லை. இதற்காக உங்கள் மீதும், மதுரை காவல்துறையினர் மீதும் நீதிமன்ற அவமதிப்புதொடர வழியுள்ளது. அதற்கு இந்த வழக்கு முற்றிலும் பொருத்தமானது என்றார் காட்டமாக.
தொடர்ந்து நீதிபதி கூறுகையில், நீங்கள் உங்களது கடமையில் கண்டிப்புடன் இருந்தால் அதை நான்பாராட்டுகிறேன். ஆனால், யாரையோ திருப்திப்படுத்துவதற்காக, யாருடைய நிர்பந்தத்திற்கோ அடி பணிவதற்காகநீங்கள் ஏன் உங்கள் பதவியை பயன்படுத்த வேண்டும்?
யாருக்காகவோ செய்யப் போய் (ஜனனி மீது வழக்கு) இப்போது நீங்கள் பிரச்சினையில் மாட்டியுள்ளீர்கள். இந்தவழக்கில் சில பின்னணி இருப்பதாக உணர்கிறேன் என்று கூறிய நீதிபதி 25ம் தேதி, நீங்கள் (கமிஷ்னர்விஜயக்குமார்) கோர்ட்டில் மறுபடியும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications