தேனி பள்ளிகளை சென்னையில் தொடங்கி வைத்த ஜெ.
சென்னை:
தேனி மாவட்டத்தில் 19 புதிய ஆரம்பப் பள்ளிகளை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். மேலும் தமிழக அரசின் கல்வித்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளஅறிவியல் தமிழ் பாடப் புத்தகங்களை வெளியிட்டார்.
எல்லோருக்கும் கல்வி என்ற திட்டத்தின் கீழ் ரூ. 340 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 356 புதிய ஆரம்பப்பள்ளிகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது. அந்த வரிசையில், தேனி மாவட்டத்தில் 19 புதிய ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் கட்டப்படவுள்ளன. அவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றுநடந்தது.
முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பள்ளிக் கூடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். புதிய கட்டடம்கட்டப்படும் வரை இந்த பள்ளிகள் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மயிலாடும்பாறை பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட கிராமங்களில்புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் தலா 2 செகண்ட் கிரேடு ஆசிரியர்கள் இருப்பார்கள்.
அறிவியல் தமிழ் புத்தகங்களை வெளியிட்டார் ஜெ.
எல்.கே.ஜி. முதல் பிளஸ் டூ வரையிலான மாணவர்களுக்கு அறிவியல் தமிழ் என்ற பாடம்அறிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான புத்தகங்களை தமிழக அரசின் கல்வித்துறை தயாரித்துள்ளது.
இந்தப் புத்தகங்களை ஜெயலலிதா வெளியிட்டார். அச்சிடப்பட்டுள்ள 17 லட்சம் புத்தகங்களும் தமிழகத்தில் உள்ளமெட்ரிகுலேஷன் பள்ளிகள் , ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளன.
முதல் முறையாக இந்த ஆண்டு இப்பாடம் அறிகப்படுத்தப்பட்டுள்ளதால், புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கஅரசு முடிவு செய்தது. ரூ. 5.42 கோடி செலவில் இப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரசின்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications