திரிசங்கு நிலையில் தலைமை செயலக தற்காலிக ஊழியர்கள்!
சென்னை:
டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைச் செயலக ஊழியர்கள் 2261 பேருக்கு மீண்டும் வேலைகொடுக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்குப் பதிலாக தேர்வு செய்யப்பட்ட 1000 தற்காலிக ஊழியர்கள் பெரும்குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் நடந்த அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுஅலுவலகங்களில் வேலை பார்ப்பதற்காக 15,000 தற்காலிக ஊழியர்களை அரசு தேர்வு செய்தது.
இவர்களில் 1000 பேர் தலைமைச் செயலகத்தில் நியமிக்கப்பட்டனர். தலைமைச் செயலக ஊழியர்கள் சுமார் 3000பேர் டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்களில் 2261 பேருக்கு மீண்டும் வேலைகொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 1000 தற்காலிக ஊழியர்களின் நிலை குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது.
இவர்களை வேறு அலுவலகங்களுக்கு மாற்றுவதா அல்லது என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசனைநடத்தி வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இவர்களைநியமிக்கலாம் என்ற கருத்தும் அதிகாரிகள் மத்தியில் நிலவுகிறது.
இது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்திற்குள் முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
பதவி இறக்கத்தில் குழப்பம்:
இதற்கிடையே, 3 நீதிபதிகள் குழுவினரால் பதவி இறக்கம் செய்ய உத்தரவிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு என்னபதவி வழங்குவது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், இது தொடர்பாக 3 நீதிபதிகள் குழுவிடம் மாநில அரசுவிளக்கம் கோரியுள்ளது.
வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தலைமைச் செயலகம் மற்றும் சென்னைமாவட்ட அரசு ஊழியர்களில் 587 பேரை நிரந்தர பணிநீக்கம் செய்தும், 56 பேருக்கு பதவி இறக்கம் செய்தும்,மீதமுள்ளவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வை ரத்து செய்தும் 3 நீதிபதிகள் குழு அரசுக்குப் பரிந்துரைசெய்தது.
இந்த பரிந்துரைகளின்படி ஊதிய உயர்வு ரத்து செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி நியமன உத்தரவுகொடுக்கப்பட்டு அவர்கள் வேலையில் சேர்ந்து விட்டனர். ஆனால் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ள 56 பேருக்குஇன்னும் நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு என்ன பதவி தருவது என்பதில் ஏற்பட்ட குழப்பமேஇதற்குக் காரணம்.
நீதிபதிகளின் உத்தரவு குழப்பமாக உள்ளதாக அரசு கருதுகிறது. பதவி இறக்கம் என்பதை, தற்போதைய பதவியில்உள்ள சீனியாரிட்டியிலிருந்து குறைத்துக் கொள்வதா அல்லது அதற்குக் கீழ் உள்ள பதவிக்கு மாற்றிசீனியாரிட்டியை குறைப்பதா என்பது அரசுக்குக் குழப்பமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீரமைப்புத் துறை, 3 நீதிபதிகள் குழுவிடம்விளக்கம் கேட்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நீதிபதிகள் குழுவுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications