மாறனின் உடல் தகனம்: வாஜ்பாய் நேரில் அஞ்சலி
சென்னை:
நேற்றிரவு காலமான மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உடல் இன்று அரசு மரியாதைகளுடன் தகனம்செய்யப்பட்டது. இடுகாட்டில் இந்த தகன நிகழ்ச்சியில் கருணாநிதியின் குடும்பத்தினருடன் பிரதமர் வாஜ்பாயும்பங்கேற்றார்.
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாறன் நேற்றிரவு 7.05 மணிக்கு காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில்வைக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மாறனின் அவரது உடலை மரியாதைகளுடன்தகனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல்ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. மாறனின் உடலின் மீது தேசியக் கொடிபோர்த்தப்பட்டது.
ராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை வீரர்கள் அந்த வேனின் இரு புறமும் அணி வகுத்து நடந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து ஒரு ஜீப்பில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரும், மாறனின்குடும்பத்தினரும் சென்றனர். இவர்களைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானகார்கள், வேன்கள், லாரிகளிலும் நடந்தும் ஊர்வலமாக சென்றனர்.
மாலை 4.30 மணியளவில் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து இந்த இறுதி ஊர்வலம் புறப்பட்டது.அங்கிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடந்தன.
சிறப்பு விமானத்தில் சென்னை வந்த பிரதமர் வாஜ்பாய் மீனம்பாக்கத்தில் இருந்து நேரடியாக பெசன்ட் நகர்புறப்பட்டுச் சென்றார். அவருடன் முன்னாள் பிரதமர் குஜ்ராலும் வந்தார். இருவரும் இடுகாட்டில் கருணாநிதிக்கும்மாறனின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்த வாஜ்பாய், மாறனின் உடல் மீது மலர் வளையம் வைத்துஅஞ்சலி செலுத்தினார். பின்னர் தகன நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வாஜ்பாயின் அருகே அமர்ந்திருந்த கருணாநிதி அழுது கொண்டே இருக்க, அவரை பிரதமர் தேற்றினார். இறுதிநிகழ்ச்சியிலும் வீட்டிலும் கருணாநிதியின் அருகிலேயே இருந்தார் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர்.
பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் நேரடியாக பெசன்ட் நகர் இடுகாட்டிற்கே வந்து இறுதி நிகழ்ச்சியில்பங்கேற்றார். மாலை 6.45 மணியளவில் 21 குண்டுகள் முழங்க மாறனின் உடல் தகனம் செய்யப்பட்டது.
கோபாலபுரத்தில் இருந்து ஆழ்வார்பேட்டை, அடையாறு வழியாக மாறனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.இறுதி ஊர்வலம் செல்லும் சாலைகளின் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் திரண்டு நின்று,மாறனுக்கு அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications