எல்லாம் அவன் செயல்: ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடவுள் அருள் காரணமாக தான் டான்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாகூறியுள்ளார்.

தீர்ப்பு வெளியானவுடன் திருவொற்றியூரில் உள்ள வடிவுடை நாயகி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தசசிகலாவுடன் ஜெயலலிதா கிளம்பினார். தனது வீட்டின் வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இப்போது என்னால் ஒன்றை மட்டுமே சொல்ல முடியும். கடவுளுக்கு நன்றி. இதற்கு மேல் எதுவும் சொல்லத்தோன்றவில்லை. கடவுள் அருள் காரணமாகவே நான் இந்த வழக்கில் நிரபாரதி என விடுவிக்கப்பட்டிருக்கிறேன்என்றார்.

பின்னர் திருவொற்றியூர் சென்ற ஜெயலலிதா அங்குள்ள வடிவுடையம்மன் கோவிலில் பயபக்தியுடன் வழிபட்டார்.அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடத்திய அவர் திரும்பி வந்து வீட்டின் வெளியே நிருபர்களிடம் பேசுகையில், நான்இது போல பல வழக்குகளைச் சந்தித்துள்ளேன். வென்றுள்ளேன். இவை எனக்குப் புதிதல்ல. எப்போதுமே நான்பிரச்சினைகளை ஒரே மாதியான மனோ பாவத்தில்தான் சந்தித்துள்ளேன். நிலுவையில் உள்ள வழக்குகளையும்அதுபோலவே சந்திப்பேன். என்றார்.

தனக்கு மிகவும் ராசியான பச்சை நிற சேலையில் இருந்தார் ஜெயலலிதா.

இதற்கிடையே, ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதற்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி, அரசுஊழியர் சங்க நிர்வாகிகள் பத்மநாபன், கலியபெருமாள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+