அழுது கொண்டே இருந்த கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Rajini paying homage to Maran

மாறனுக்கு அஞ்சலி செலுத்தும் ரஜினி
துயரப்பட்டபோதெல்லாம் என்னை ஆற்றுமைப்படுத்திய மாறன் இன்று இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதிஉருக்கமாக தெரிவித்துள்ளார்.

மாறனின் மரணச் செய்தி திமுகவினரை விட ஒரு படி அதிகமாகவே, அக்கட்சியின் தலைவர் கருணாநிதியை உலுக்கிஉள்ளது. மாறனின் கடைசி மூச்சு வரை அவருக்கு அருகாமையில் இருந்த கருணாநிதி மனதளவில் பெரிதும்உடைந்து காணப்பட்டார்.

அவரது கோபாலபுரம் வீட்டில் மாறனின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு அருகில் கருணாநிதிஅமர்ந்திருந்தார். யாருடனும் பேசாமல், கண்களில் நீர் கொப்பளிக்க, சாப்பிடக் கூட மறுத்து விட்டு அவர்உட்கார்ந்திருந்தார். அவ்வப்போது தேம்பி அழுதார்.

தன்னைப் பார்த்து இரங்கல் கூறும் தலைவர்களிடம்கூட அவர் பேசவில்லை. மாறாக, கண்களால் அவர்களதுஇரங்கல்களை ஏற்றுக் கொண்டார்.

மாறனின் உடல் முதலில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்தான் வைக்கப்படவிருந்தது.ஆனால், மாறனின் இறுதிச் சடங்குகள் முடியும் வரை அருகிலேயே இருப்பேன் என்று கருணாநிதி கண்டிப்பாகக்கூறி விட்டார். இதனால் கருணாநிதியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கோபாலபுரத்திலேயே மாறனின்உடலை வைக்க தீர்மானிக்கப்பட்டது.

மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு வந்து நெஞ்சில் அடித்துக் கொண்டு எல்லாம் முடிஞ்சு போச்சே என்று கதறினார்.அதைப் பார்த்து கருணாநிதியும் விம்மி, விம்மி அழுதார். இதையடுத்து அவரது காலடியில் போய் அமர்ந்த பாலு,கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

மாறனின் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் கருணாநிதி எதுவும் கூறவில்லை. மாறாக, அவரது உதவியாளர்சண்முகசுந்தரம் மூலம் பத்திரிக்கைக் குறிப்பு பின்னர் வெளியிடப்பட்டது.

அதில், என்ன பேசுவது, எதைப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. எதையும் பேசும் மனநிலையிலும் நான்இப்போது இல்லை. துயரப்பட்டபோதெல்லாம் என்னை ஆறுதல்படுத்திய நபர் இன்று இல்லை என்று கருணாநிதிதெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+