ரணில், கலாம் இரங்கல்: ரஜினி நேரில் அஞ்சலி
சென்னை:
முரசொலி மாறனின் மறைவுக்கு ஜனாதிபதி அப்துல் கலாம், இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர்இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்தியஅமைச்சர்கள், அதிமுக தவிர்த்த அனைத்துக் கட்சித் தலைவர்களும், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் அஞ்சலிசெலுத்தினர்.
கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு வந்த தமிழக ஆளுநர் ராம் மோகன் ராவ் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினார். அதே போல கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆகியோரும் மாறனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கருணாநிதியையும், மாறனின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மத்திய அமைச்சர்கள் திருநாவுக்கரசர், செஞ்சி ராமச்சந்திரன், ஏ.கே. மூர்த்தி ஆகியோரும், பாமக நிறுவனர்ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன்,எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன், மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் முதலானஅரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சிவக்குமார், சத்யராஜ், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகைமனோரமா, இந்து பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் ராம் ஆகியோரும் மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந் நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கருணாநிதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுமாறனின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார். ரணில் சார்பில் இலங்கைத் துணைத் தூதர் சுமித் நாகமத்லாமலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
ஜனாதிபதி அப்துல் கலாம், மாறனின் மகன் தயாநிதி மாறனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனதுஇரங்கலைத் தெரிவித்தார். துணைப் பிரதமர் அத்வானியும் கலாநிதியிடம் தொலைபேசி மூலம் இரங்கல்தெரிவித்தார்.
தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திகள் பின்வருமாறு:
ஆளுநர்:ஆளுநர் ராம் மோகன் ராவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழம்பெரும் நாடாளுமன்றஉறுப்பினராகவும், மிகச் சிறந்த நிர்வாகியுமான மாறனின் மறைவு தமிழகத்திற்கு மிகப் பெரிய இழப்பு.தமிழகத்திற்கும், நாட்டுக்கும் அவர் மத்திய அமைச்சராக மிகச் சிறந்த பங்காற்றியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு: கொள்கைப் பிடிப்புள்ள தலைவராக மாறன் திகழ்ந்தார். சிறந்தநிர்வாகியாகவும் விளங்கினார் . தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் அமைச்சர்களில் மிகச் சிறந்தவராகவும்திகழ்ந்தவர் மாறன். உலக வர்த்தகக் கழகத்தில், வளரும் நாடுகளின் குரலாக இருந்து வளரும் நாடுகளுக்குபேருதவி புரிந்தவர் மாறன். எனக்கு நல்ல நண்பராகவும் இருந்தவர்.
மத்திய அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர்: கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக லோக் சபா உறுப்பினராகவும்,ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார் மாறன். இதுவரை தமிழகத்தில் யாருமே இவ்வளவு நீண்ட காலம்எம்.பியாக இருந்ததில்லை. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்தவர். தனது வாதத் திறமையால் யாரையும்வெற்றி கொள்ளக் கூடியவராக அவர் திகழ்ந்தார்.
தமிழக காங்கிரஸ் தலைலர் ஜி.கே.வாசன்: சியாட்டில் உலக வர்த்தகக் கழக மாநாட்டில் வளரும் நாடுகளின்உரிமையைப் பறிக்கும் முயற்சியில் வளர்ந்த நாடுகள் இறங்கியபோது, தனது வாதத் திறமையால் தடுத்துநிறுத்தியவர் மாறன்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: மாறன் மறைவு நாட்டுக்கும், திமுகவுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். மிகச்சிறந்த நிர்வாகியாக, நாடாளுமன்ற உறுப்பினராக அழிக்க முடியாத அளவுக்குப் புகழைப் பெற்றுள்ளார் மாறன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: வேலூர் சிறையிலிருந்து வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,டெல்லி அரசியலில் எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் மாறன். தமிழர்கள் மீது இந்தி மொழிதிணிக்கப்பட்டபோதும், மாநிலங்களின் அதிகாரம் குறித்த பிரச்சினைகளின்போதும் டெல்லியில் தனது வாதத்தைஆணித்தரமாக எடுத்து வைத்தவர் மாறன். மாறனின் மறைவு நாட்டுக்கும், திமுகவுக்கும் மிகப் பெரிய இழப்பு.அவரது மறைவுக்கு மதிமுக 3 நாள் துக்கம் அனுசரிக்கும் என்று கூறியுள்ளார்.
மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவர் கண்ணப்பன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி,விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன், பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன், தி.க. தலைவர்கி.வீரமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மாறன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்
மாறன் மறைவையடுத்து திமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர் பிறந்த மாவட்டமான திருவாரூரில் கடையடைப்பு நடத்தப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் பிறந்தவர் மாறன். இதனால் மாறன் மறைவுக்கு திருவாரூர் மாவட்டம்அஞ்சலி செலுத்தியது. திருவாரூர் நகரில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று மூடப்பட்டிருந்தன. அதேபோல,திருக்குவளையிலும் கடையடைப்பு நடத்தப்பட்டது.
திமுகவினர் மற்றும் திருவாரூர் வர்த்தக சங்கம் சார்பில் ரயில் நிலையத்திலிருந்து அமைதிப் பேரணி கிளம்பி,மாவட்ட திமுக அலுவலகத்தில் முடிவடைந்தது. அங்கு மாறன் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலிசெலுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications