மாறன்: கருணாநிதியின் மனசாட்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கருணாநிதியின் மனசாட்சி என்று திமுகவினராலும், எனது கண்ணின் கருவிழி என்று கருணாநிதியாலும்விமர்சிக்கப்பட்டவர் முரசொலி மாறன். அவரது மறைவினால் கருணாநிதி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.

1934ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் பிறந்தவர் முரசொலி மாறன். அவருக்கு பெற்றோர்இட்ட பெயர் தியாகராஜ சுந்தரம். பின்னாளில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக இறங்கியதால் கருணாநிதியின்ஆலோசனைப்படி மாறன் என்று மாற்றிக் கொண்டார்.

1963ம் ஆண்டு மனைவி மல்லிகாவைக் கைப்பிடித்தார். பள்ளிப் படிப்பு திருவாரூர் போர்டு பள்ளியில். கல்லூரிப்படிப்பை சென்னை பச்சையப்பா கல்லூயிலும், சட்டப் படிப்பை சென்னை சட்டக் கல்லூயிலும் முடித்தார்.

முதல் முறையாக 1967ம் ஆண்டு தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் எம்.பி. யாக வெற்றி பெற்றார்.பின்னர் 1971ம் ஆண்டு மீண்டும் எம்.பி. யாக தேர்வு பெற்றார். 1977 முதல் 1995 வரை 3 முறை ராஜ்யசபாஎம்.பியாக இருந்துள்ளார். மீண்டும் 1999ம் ஆண்டு லோக்சபா உறுப்பினராக மத்திய சென்னை தொகுதியிலிருந்துதேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய அரசியலில் திமுகவின் பங்கு முக்கியமாக இருந்த காலகட்டத்தில் வி.பி.சிங் அரசில், மத்திய நகர்ப்புறவளர்ச்சித்துறை அமைச்சராக 1989ம் ஆண்டு முதல் 1990வரை இருந்தார்.

1996 முதல் 98 வரை வாஜ்பாய் அரசில் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். மீண்டும் 1998ம் ஆண்டுலோக்சபா உறுப்பினராக வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு லோக்சபா கலைக்கப்பட்டு தேர்தல்நடத்தப்பட்டபோது மீண்டும் மத்திய சென்னை தொகுதியிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1999ம் ஆண்டு மீண்டும் வாஜ்பாய் அரசு பதவியேற்றபோது தொழில்துறை அமைச்சராக மாறன் மீண்டும்நியமிக்கப்பட்டார்.

கருணாநிதியின் ஆலோசகராகவும், கருணாநிதியால் பேச முடியாததை மாறன் தயக்கமின்றி பேசியதாலும் அவரதுமனசாட்சியாகவே திமுகவினரால் பார்க்கப்பட்டார். அண்ணாவின் மறைவுக்குப் பின், கருணாநிதி தலைவராகப்பொறுப்பேற்ற பிறகு, திமுகவின் வளர்ச்சியிலும், கருணாநிதியின் வளர்ச்சியிலும் முரசொலி மாறனின் பங்கு மிகப்பெரியது.

மாறனின் மறைவு திமுகவுக்கு, குறிப்பாக கருணாநிதிக்கு மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+