வழக்கை திமுக சரியாக நடத்தவில்லை: சு.சுவாமி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி வழக்கை திமுக சரியாக நடத்தவில்லை. இதனால் தான் நீதிமன்றத்திடம் இருந்துதப்பிவிட்டார் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் வெளியே என்.டி.டி.விக்கு அவர் அளித்த பேட்டியில்,

இந்த வழக்கை நான் தான் நடத்த இருந்தேன். அதை நடத்த எனக்கு அனுமதியும் தரப்பட்டிருந்தது. இந் நிலையில்1996ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக இந்த வழக்கை என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டது.

அன்று முதல் இந்த வழக்கு சரியாக நடத்தப்படவேயில்லை. இந்த வழக்கில் நீதிபதிகள் முழுக்க முழுக்கஎழுத்தப்பட்ட சட்டத்தை (letter of the law ) மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.மற்றபடி இந்தத் தீர்ப்பில் sprit of the law இல்லை.

எப்படியோ தங்களது தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள். இதிலிருந்துஅவர் பாடம் கற்றுக் கொண்டால் சரி.

இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா தப்பியிருக்கலாம். ஆனால், ஸ்பிக் வழக்கு, சந்திரலேகா மீது ஆசிட் அடித்தபுகார், வருமானத்தை மீறி ஜெயலலிதா சொத்து சேர்த்த வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ளன.

அந்த வழக்குகள் முறையாக நடத்தப்பட்டால் நிச்சயமாக ஜெயலலிதா தண்டிக்கப்படுவார் என்றார் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+