அதிமுகவினர் கொண்டாட்டம்: திமுக அலுவலகங்கள் எதிரே பட்டாசு வெடிப்பு
சென்னை:
டான்சி வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் விடுவிக்கப்பட்டதையடுத்துமாநிலம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக இந்தத் தீர்ப்பு சாதகமாக வருமா, பாதகமாக வருமா என்ற அச்சம் நிலவியதால் அதிமுக எம்.எல்.ஏக்கள்அனைவரும் இன்று சென்னையில் இருக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்துநேற்றிரவே அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கள் ஊர்களில் இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்துவிட்டனர்.
மேலும் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் சென்னையிலேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தின் முன் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டிருந்தனர். கையில்பட்டாசுகளும் இனிப்புகளும் வைத்திருந்தாலும் தீர்ப்பு எப்படி இருக்குமோ என்ற பதற்றத்தில் இருந்தனர்.
அதே போல ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலும் தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரும்டென்சடனுடன் உலாவிக் கொண்டிருந்தனர்.
இந் நிலையில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதாக தகவல் வர, அதிமுகவினர் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டுஓடியது. ஆயிரம்வாலா பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதிமுகவினர் போவோர்,வருவோர்க்கெல்லாம் இனிப்புகளையும் அள்ளி வழங்கி மகிழ்ந்தனர்.
அதே போல மதுரை பஸ் நிலையம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலும் அதிமுகவினர் வெடிகளை வெடித்தும்இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
சென்னையில் சைதாப்பேட்டை, தி.நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர்உற்சாகமாக ஊர்வலம் வந்தனர். மனோபாவத்தில் வலம் வந்தனர்.
முரசொலி மாறன் மறைவினால் சோகமாக காணப்பட்ட திமுக கட்சி அலுவலகங்கள் அருகே அதிமுகவினர்பட்டாசுகள் வெடிக்க முற்பட்டபோது போலீஸார் தடுத்து வேறு பகுதிகளில் வெடிக்குமாறு அறிவுறுத்தினர். திமுக,அதிமுகவினடையே மோதல் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொருட்டு மாநிலம் முழுவதிலும் போலீஸார் உஷார்நிலையில் உள்ளனர்.
தீர்ப்பு வரும் வரை போயஸ் கார்டனில் போர்டிகோவில் படு டென்சனாகக் காத்திருந்த அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் அனைவரும் தீர்ப்பு வந்தவுடன் ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர்களைச் சந்திக்கஜெயலலிதா வெளியே வந்தவுடன் அனைவரும் அவருக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
தீர்ப்பு பாதகமாக இருந்திருந்தால் ஜெயலலிதா பதவி விலக வேண்டி வந்திருக்கும் என்பதால்,முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசுஅறிவுறுத்தியிருந்தது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது அதிமுகவினர் வன்முறையில் இறங்கி,பேயாட்டம் போட்டனர். தர்மபுரியில், கோவை விவசாயக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ்ஸை எரித்தனர்.அதில், 3 மாணவிகள் உயிரோடு எரிந்து சாம்பலானது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications