டான்சி வழக்கு: முழு பின்ணணி
சென்னை:
1992ம் ஆண்டில் அரசுக்குச் சொந்தமான (Tamil Nadu Small Industries Corporation - TANSI) டான்சிநிறுவனத்தின் பவுண்ட்ரி ஆலை ( Foundry) நிலத்தை ஜெயா பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வாங்கியது.
அதே போல டான்சி நிறுவனத்தின் எனாமல் வயர் யூனிட்டுக்குச் சொந்தமான நிலத்தை சசி எண்டர்பிரைசஸ்நிறுவனம் வாங்கியது. இந்த ஜெயா பப்ளிகேசன்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகியவை ஜெயலலிதா-சசிகலாவுக்கு சொந்தமானவை.
இதையடுத்து அரசு நிலத்தை முறைகேடாக, மிகக் குறைந்த விலைக்கு வாங்கி மோசடி செய்ததாக வழக்குப் போடதிமுக முடிவு செய்தது. அது குறித்து திமுகவின் வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரமும், ஆலந்தூர் பாரதியும் ஆலோசனைநடத்தினர்.
ஆலந்தூர் பாரதியுடன் பேசிவிட்டுத் திரும்பிய சண்முகசுந்தரத்தை ஒரு கும்பல் பயங்கரமாகத் தாக்கியது. விரல்கள்துண்டாகி, குற்றுயுரும் குலையுருமாக அவர் மருத்துவமனையில் நெடுநாட்கள் இருந்து உயிர் தப்பினார்.
இந்தத் தாக்குதலுக்கு ஜெயலலிதா- சசிகலாவே காரணம் என திமுக குற்றம் சாட்டியது.
இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஜெயலலிதா, சசிகலா, அப்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்முகமது ஆசிப், அப்போதைய டான்சி தலைவர் டி.ஆர். சீனிவாசன், வருவாய்த்துறை அதிகாரி நாகராஜன்,முதல்வரின் கூடுதல் செயலாளராக இருந்த கற்பூரசுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
(திமுக ஆட்சியில் சண்முகசுந்தரத்துக்கு உயர் நீதிமன்ற அரசு தலைமை வழக்கறிஞர் பதவியைத் தந்தார் கருணாநிதி.இப்போது அவர் திமுக ராஜ்யசபா எம்.பியாக உள்ளார்.)
இந்த வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார் நீதிபதி அன்பழகன். முகமது ஆசிப் விடுவிக்கப்பட்டார். இந்தத் தீர்ப்பினால்ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. தேர்தலும் செல்லாது என்றானது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார் ஜெயலலிதா.
தனி நீதிமன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் 2001ம் ஆண்டில் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடமுடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக வென்றது. இதையடுத்து எம்.எல்.ஏவாக இல்லாதநிலையிலும், ஜெயலலிதாவை முதல்வராகப் பதவியேற்க அனுமதி தந்தார் ஆளுநர் பாத்திமா பீவி.
ஆனால், உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதல்வரானது செல்லாது என அறிவித்தது. இதனால் ஓ.பன்னீர் செல்வத்தைமுதல்வராக்கிவிட்டு ஜெயலலிதா பதவி விலகினார்.
ஜெயலலிதா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலான அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி தினகர்,ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து இருவரையும் விடுவித்தார்.இதையடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பதவியேற்றார்.
ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து முதல் முறையாக டான்சி நில ஊழல் தொடர்பாக புகார் கொடுத்தவர் என்றஅடிப்படையிலும், சம்பந்தப்பட்ட டான்சி நிலம் உள்ள சென்னை ஆலந்தூர் நகராட்சித் தலைவர் என்ற முறையிலும்,திமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்தார். இந்தவழக்கில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த மனுவை நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் விசாரித்தனர். கடந்த ஆண்டுசெப்டம்பர் 26ம் தேதி இந்த மனு மீதான விசாரணையை முடித்த நீதிபதிகள் தீர்ப்பை காலவரையின்றிஒத்திவைத்தனர்.
மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தத் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் தீர்ப்பு என்பதால், தமிழகம் மட்டுமல்லாதுஇந்தியா முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தீர்ப்பு அவருக்கு சாதமாகிவிட்டதால் இதை ஒரு பொய் வழக்கு என்று சொல்லி திமுகவைப் புரட்டி எடுக்கஅவருக்கு உரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு












Click it and Unblock the Notifications