இந்தியில் பேசி அசத்திய ஜெயலலிதா!
சென்னை:
டான்சி வழக்கு தீர்ப்பு குறித்து கருத்துக் கேட்ட இந்தி தொலைக்காட்சி சேனலின் நிருபருக்கு இந்தியிலேயே பதில்சொல்லி அசத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
டான்சி நில பேர ஊழல் வழக்கில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டார் ஜெயலலிதா. இதைத்தொடர்ந்து அவரது வீட்டுக்கு செய்தியாளர்கள் கூட்டம் பறந்தது. அப்போது நிருபர்களின் கேள்விகளுக்குஆங்கிலத்தில் பதில் சொன்ன ஜெயலலிதா, ஜி டிவி நிருபரின் கேள்விக்கு இந்தியிலேயே பதில் சொல்லிஅசத்தினார்.
எல்லாம் அவன் செயல், கடவுளுக்கு நன்றி என்பதை இந்தியில் அவர் சொன்னபோது, கேள்வி கேட்ட டிவிநிருபரின் முகத்தில் பயங்கர ஆச்சரியம்.
தேசிய அளவில் அரசியல் களம் காண தான் தயாராக இருப்பதை உணர்த்தவே ஜெயலலிதா இந்தியிலும்பேசினாரோ?
வாஜ்பாயை வரவேற்ற ஜெ:
உச்சநீதிமன்றத் தீர்ப்பினால் உற்சாகமாக இருந்த ஜெயலலிதா, மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்னை வந்த பிரதமர் வாஜ்பாயை வரவேற்க விமான நிலையம் சென்றார்.
கடந்த முறை வாஜ்பாய் சென்னை வந்தபோது அவரை ஜெயலலிதா வரவேற்கவில்லை. மாறாக ஊட்டி நிகழ்ச்சியில்கலந்து கொள்ள சென்று விட்டார். இந் நிலையில் மாறன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவுவாஜ்பாய் சென்னை வந்தபோது அவரை விமான நிலையம் சென்று ஜெயலலிதா வரவேற்றார்.
முதல்வர் தவிர, ஆளுநர் ராம் மோகன் ராவ், மத்திய அமைச்சர்கள் ஏ.கே.மூர்த்தி, என்.டி.சண்முகம், திருநாவுக்கரசர்,பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோரும் வாஜ்பாயை வரவேற்றனர்.
பெசன்ட் நகர் இடுகாட்டில் மாறனின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் வாஜ்பாய்சிறப்பு விமானத்தில் டெல்லி திரும்பினார். அவருடன் வந்த முன்னாள் பிரதமர் குஜ்ராலும் அதிலேயே டெல்லிபுறப்பட்டார். அதே விமானத்தில் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசும் டெல்லி திரும்பினார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications