மீண்டும் பத்திரிக்கைகள் மீது தமிழக அரசு வழக்கு: ஒரே வாரத்தில் 23 வழக்குகள் பதிவு
சென்னை:
சென்னை நீதிமன்றத்தில் ஒரே நாளில், பல்வேறு பத்திரிக்கைகள் மீது 23 அவமதிப்பு வழக்குகளை தமிழக அரசுதொடர்ந்துள்ளது. இதில் இந்து, இந்தியா டுடே ஆங்கில பத்திரிக்கைகளும் முரசொலி, கல்கி, துக்ளக் ஆகிய தமிழ்பத்திரிக்கைகளும் அடங்கும்.
பத்திரிக்கைகள் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்குகளைப் போடுவது வழக்கம் தான். ஆனால், பல்வேறுபத்திரிக்கைகள் மீது ஒரே நேரத்தில் 23 அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. கடந்தஒரு வார காலத்தில் இத்தனை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்து வந்த துக்ளக் ஆசிரியர் சோ மீதும் அவமதிப்பு வழக்குஅஸ்திரம் பாய்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14 மற்றும் 30 ஆகிய தேதிகளில் துக்ளக் பத்திரிக்கையில், வெளியானகார்ட்டூன்கள், அரசையும், முதல்வரையும், அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி துக்ளக் மீது வழக்குதொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வக்கீல் டி.வி.கணேஷ் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்துள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், பத்திரிக்கை ஆசிரியர் சோ ராமசாமி, கார்ட்டூன் கலைஞர் ரா, பதிப்பாளர்ரங்காச்சாரி ஆகியோரை டிசம்பர் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இதேபோல, கல்கி, முரசொலி ஆகிய பத்திரிக்கைகளில் ஏப்ரல் 25ம் தேதி வெளியான கார்ட்டூன், அரசுக்குஅவமரியாதை சேர்ப்பதாகக் கூறித் தொடரப்பட்டுள்ள இன்னொரு வழக்கில், சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளின்ஆசிரியர்கள் கோர்ட்டில் ஆஜராகுமாறு நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார்.
அதே போல இந்து மீது புதிதாக 4 வழக்குகளும், இந்தியா டுடே மீது 5 வழக்குகளும், நக்கீரன் மீது சிலவழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்று ஒரே நேரத்தில் இத்தனை அவமதிப்பு வழக்குகள் பத்திரிக்கைகள் மீது தொடரப்பட்டுள்ளது பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை இந்து, முரசொலி, நக்கீரன், இந்தியா டுடே, கல்கி, தீக்கதிர், தினகரன், தினமலர், துக்ளக் உள்ளிட்டபத்திரிக்கைகள் மீது மொத்தம் 80க்கும் மேற்பட்ட அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications