29ம் தேதி அரசு மதுக்கடைகள் திறப்பு
சென்னை:
தமிழக அரசின் கூட்டுறவுக் கழகங்கள் மூலம் வரும் 29ம் தேதி முதல் சில்லறை மதுபான விற்பனை தமிழகத்தில்தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் சில்லறை மதுபான விற்பனையை அரசே நடத்த முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து தனியார் மதுபானவிற்பனையாளர்களின் உரிமம் ரத்தாகியது. இந் நிலையில் வரும் 29ம் தேதி முதல் அரசே நடத்தவுள்ள மதுபானவிற்பனை தொடங்கவுள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதிலும் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு கலால் அலுவலகங்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் தேர்வுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் இன்னும் டெபாசிட் தொகையை செலுத்தவில்லை. இதைக் கட்டகடைசித் தேதி நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னும் தேர்வு செய்யப்பட்டவர்கள் டெபாஸிட் கட்டவில்லை என்றால் காத்திருப்போர் பட்டியலில்இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், திட்டமிட்டபடி 29ம் தேதி அரசு மதுக்கடைகள் திறக்கப்படும்என்றும் சேலம் டாஸ்மார்க முதுநிலை மண்டல மேலாளர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
மாநிலத்திலேயே அதிக அளவில் தர்மபுரி மாவட்டத்தில்தான் விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்பொறுப்புக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
புதிய முறைப்படி, மாநிலம் முழுவதிலும் டாஸ்மார்க் நிறுவனமே மதுபான விற்பனை நிலையங்களை அமைக்கும்.சென்னையில் மட்டும் 1,500 மதுபான விற்பனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
மதுபான கொள்கை: நீதிபதிகள் கேள்வி
இதற்கிடையே, அரசு நடத்தும் மதுபான கடைகளுக்குத் தடை கோரியும், தற்போது தனியாருக்கு தரப்பட்டுள்ளஉரிமத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கக் கோரியும் தனியார் சில்லறை மதுபான விற்பனையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுபாஷன் ரெட்டி. ஞானப்பிரகாசம் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மதுபானவிற்பனையில் அரசு அடிக்கடி முடிவை மாற்றுவது ஏன்? பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் இதுபோல் அடிக்கடி முடிவுகளை அரசு மாற்றக்கூடாது. நிலையான முடிவு எடுக்கவேண்டும் என்று கடுமையாகக்கூறினர்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications