எய்ட்ஸ் நோயாளியை உயிருடன் புதைக்க முயற்சி!
கரூர்:
இன்னும் சில மணி நேரத்தில் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கூறியதால், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த எய்ட்ஸ் நோயாளியை உயிருடன் புதைக்க முயற்சி நடந்தது.
இதையடுத்து அவரைப் புதைக்கச் சென்ற கும்பல் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த நோயாளி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கரூர் செங்குந்தன் நகரைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக். மனைவியை விவாகரத்து செய்து விட்ட இவருக்கு எச்.ஐ.வி. வைரஸ் பாதிப்பு இருந்ததால் கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அங்கு இவருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு இவரை மாற்றினார்கள்.
அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சாதிக்கின் உடல் நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டார். அவரது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள், சில மணி நேரம் மட்டுமே இவர் உயிரோடு இருப்பார் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து சாதிக்கை வீட்டுக்குக் கொண்டு வந்தனர் அவரது உறவினர்கள். ஆனால், சாதிக் வசித்து வந்த வீட்டை வடைக்கு விட்டிருந்த நபர், எய்ட்ஸ் பாதித்த சாதிக்கை உள்ளேஅனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார். அக்கம் பக்கத்தினரும் சாதிக்கை வீட்டுக்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.
என்ன செய்வது என்று புரியாமல் குழம்பினர் சாதிக்கின் உறவினர்கள். எப்படியும் சாகப் போகிறார், இப்போதே இறுதிச் சடங்குகளை செய்து அடக்கம் செய்து விடலாமே என்று கூட்டத்தில் ஒருவர் அதிர்ச்சிகரமான ஆலோசனை கூறியுள்ளார். அதை அனைவரும் ஏற்றுக் கொண்டு தலையாட்டினர்.
இதையடுத்து வழக்கமான சடங்குகளை செய்த உறவினர்கள், சாதிக்கை உயிருடன், பாலாம்பாள்புரத்தில் உள்ள முஸ்லீம் மயானத்திற்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் உயிருடன் சாதிக்கை புதைக்க நடக்கும் ஏற்பாடுகள் குறித்து அறிந்த உள்ளூர் முஸ்லீம் பிரமுகர்கள் விரைந்து வந்து அதைத் தடுத்தனர்.
பின்னர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சாதிக்கை கரூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications