ஜனனி- நடராஜனை பிரிக்கவே கஞ்சா கேஸ் போட்டார்கள்: கருணாநிதி
சென்னை:
சசிகலாவின் கணவர் நடராஜனிடம் இருந்து சசிகலாவைப் பிரிக்கவே ஜனனி மீது பொய்யாக கஞ்சா கேஸ் போட்டார்கள் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசினார். அப்போது அவரிடம் நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை நிருபர், டான்சி வழக்கில் ஒரு மாதிரியாகவும் நீதிபதி கற்பக விநாயகம் விஷயத்தில் முரண்பட்டும் பேசுகிறீர்களே என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கருணாநிதி, செரீனா (ஜனனி) கேஸ் என்றாலே நடராஜன் சம்பந்தப்பட்ட விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜனிடம் இருந்து ஜனனியைப் பிரிக்க முயற்சி செய்தார்கள். அதற்காக ஜனனி மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு தொடர்ந்துள்ளார்கள். ஜனனியிடம் கஞ்சா ஏதும் இல்லை. உண்மையா, இல்லையா?. மனதார பொய் சொல்லக் கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள்.
நமது எம்.ஜி.ஆர். நிருபர் கேள்வி கேட்டதற்காக இந்த பதிலை சொல்கிறேன். இதற்காக என் மீது கஞ்சா கேஸ் போட்டாலும் சரி.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மனசாட்சியை நினைத்துப் பார்த்து, பரிகாரம் தேடுமாறு கூறியுள்ளது.
இந்தக் கண்டனம், தண்டனையைவிடவும் மிகப் பெரியது, கடுமையானது என நாங்கள் நினைக்கிறோம். இதனால் இந்த வழக்கில் விடுதலையானதற்காக ஜெயலலிதா மகிழ்ச்சி அடைவதில் அர்த்தமில்லை.
உச்ச நீதிமன்ற கண்டனத்துக்குள்ளான ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என அதிமுக, பா.ஜ.கவைத் தவிர வேறு எல்லா கட்சிகளுமே கோரிக்கை விடுத்துள்ளன. திமுகவின் நிலையும் அது தான்.
நூற்றுக்கு 95 நீதிபதிகள் நீதிபதிகளாக இருக்கிறார்கள். மீது பேர் நீதி- பாதிகளாக இருக்கிறார்கள் என்றார்.
இந்த வழக்கை திமுக சரியாக நடத்தவில்லை என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது பதிலளிக்க கருணாநிதி மறுத்துவிட்டார்.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் கையில் எடுக்கப்போகும் 2 மெகா திட்டங்கள்.. ஆதவ் அர்ஜுனா சர்ப்ரைஸ் அப்டேட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications