ஜெ.-சசி ஹைதராபாத் பயணம்-: நாயுடுவை சந்திக்கிறார்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று சசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார்.
டான்சி நில பேர வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இந் நிலையில் ஜெயலலிதா இன்று தனி விமானத்தில் சசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார். இம் மாதக் கடைசி வரை அவர் ஹைதராபாத்தில் தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை மறுதினம் அவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேசுகிறார். அப்போது தேசிய அரசியல், மூன்றாவது அணி குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந் நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. அடுத்த மாத பிற்பகுதி வரை மட்டுமே குடிநீர் கொடுக்க இயலும். எனவே கண்டலேறு அணையிலிருந்து 3 டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
இக் கோரிக்கையை நேரில் சென்று வலியுறுத்துவதற்காக முதல்வர் ஜெயலலிதா ஹைதராபாத்தில் 28ம் தேதி நாயுடுவைச் சந்திக்கவுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் நாளை மறுநாள் ஹைதராபாத் செல்கின்றனர்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் ஹைதராபாத் பயணத்தால் 27, 28ம் தேதிகளில் சென்னையில் நடக்க இருந்த கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அன்ன தானத்திற்கு ஜெ. ரூ 40,000:
முதல்வர் ஜெயலலிதா தனது 4 மாத சம்பளப் பணத்தை நான்கு கோவில்களின் அன்னதானத் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜெயலலிதா, அன்று முதல் தனது மாதச் சம்பளத்தை ஒவ்வொரு கோவிலுக்கும் நன்கொடையாக வழங்கி வருகிறார்.
அந்த வகையில் தனது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாத சம்பளமான ரூ. 40,000 பணத்தை, சென்னை சக்தி விநாயகர் கோவில், வல்லக்கோட்டை சுப்ரமணியசுவாமி கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் வெங்கடாச்சலபதி கோவில் ஆகியவற்றிற்கு அளித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட கோவில்களின் நிர்வாக அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இதற்கான காசோலைகளை முதல்வரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
-
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications