ரம்ஜான்: மெரீனாவில் தொழுகைக்கு அனுமதியில்லை
சென்னை:
சென்னை மெரீனா கடற்கரையில் ரம்ஜான் சிறப்புத் தொழுகைக்கு அரசு அனுமதி வழங்காததால், தீவுத் திடலில் ரம்ஜான் கூட்டுத் தொழுகை நிகழ்ச்சி நடந்தது.
ரம்ஜான் பண்டிகை இன்று தமிழகம் முழுவதிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் வழக்கமாக மெரீனா கடற்கரையில் கூட்டுத் தொழுகை நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால் கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மெரீனாவில் எந்த பொது நிகழ்ச்சியும், மத நிகழ்ச்சியும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரம்ஜான் தொழுகை நடத்தவும் அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து தீவுத் திடலில் கூட்டுத் தொழுகை நடந்தது.
இங்கு நடந்த கூட்டுத் தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இதுதவிர ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடந்தன.
இதேபோல, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஈத்கா மைதானங்களிலும், பள்ளி வாசல்களிலும் ரம்ஜான் சிறப்புத் தொழுகைகள் நடந்தன.
தலைவர்கள் வாழ்த்து:
ரம்ஜான் பண்டிகையையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒரு மாத காலம் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்திக் கொண்டு, இறைவன் அருளால் பெற்ற பொருளில் ஒரு பங்கை ஏழை மக்களுக்கு ஈந்து, மகிழும் ஈகைத் திருநாள் இந்த ஈத் பெருநாள்.
இந்த நன்னாளில் சாந்தியும், சமாதானம் தழைக்கட்டும், சமதர்மம் ஓங்கட்டும், சகல நாடுகளிலும் சகோரத்தத்துவம் வளரட்டும் என்று கூறியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணல் நபி அருளிய போதனைகளின்படியும், திருமறை வகுத்தளித்த நெறிமுறைகளின்படியும், கடந்த முப்பது நாட்களாக பசிப்பிணி பொறுத்து நோன்பு நோற்று இன்று ஈகைத் திருநிாள் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இதயமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆட்சியாளர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்ற நபி பெருமானாரின் கூற்று இன்றைய காலத்திற்கும் உகந்ததாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தியில், சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும், அண்டை அயலாரோடு சமூக நல்லிணக்கத்தோடும், சமய நல்லுணர்வு பேணி வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் தவிர பல்வேறு தமிழக அரசியல் தலைவர்களும் ரம்ஜான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications