ஒயின் ஷாப் கட்டளைகள்: நோ கட்டிங்.. ஒன்லி குவார்டர்..
சென்னை:
அரசு நடத்தவுள்ள மதுக்கடைகளில் பணிபுரிபவர்களுக்கு 57 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வரும் 29ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுமார் 8,500 மதுக் கடைகளை தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் எடுத்து நடத்தவுள்ளன.
கடைக்கு ஒரு மேற்பார்வையாளரும் (ஊதியம் ரூ. 2,500), 4 விற்பனையாளர்களும் (ஊதியம் ரூ. 1,000) நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மேற்பார்வையாளர்கள் ரூ. 50,000மும் விற்பனையாளர்கள் ரூ. 15,000மும் டெபாசிட் தொகையைக் கட்டி வேலையில் சேர்ந்து வருகின்றனர். பலர் பணம் கட்ட முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
இவர்களுக்கு 28ம் தேதி ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இந் நிலையில் இவர்களுக்கு 57 கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கியமான கட்டுப்பாடுகளின் விவரம்:
* கடையின் வரவு- செலவு, சரக்குகளின் (மது வகைகள்) உரிய கணக்குகளை மேற்பார்வையாளர் பேணி வர வேண்டும்.
* கடையின் சாவி அவர் வசமே இருக்க வேண்டும். கடையை மூடும்போதும் திறக்கும்போதும் மேற்பார்வையாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
* குளறுபடிகள் நடந்தாலோ, சரியாக பணியைச் செய்யாவிட்டாலோ ஊழியர்கள் முன் அறிவிப்பில்லாமல் பணி நீக்கம் செய்யப்படும். அவர்களின் டெபாசிட் தொகையும் திருப்பித் தரப்பட மாட்டாது.
* தினமும் வேலைக்கு வர வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 12 வரை கடைகள் திறந்திருக்க வேண்டும்.
* 21 வயதுக்கு குறைவான யாரையும் பாரில் மது அருந்த அனுமதிக்கக் கூடாது. கடையில் ஆபாச சுவரொட்டிகளையோ, படங்களையோ வைக்கக் கூடாது
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளில் 30 மில்லி, 60 மில்லி எல்லாம் ஊற்றித் தரும் திட்டமும் இல்லையாம். குடிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் குவார்டர் வாங்கித் தான் அடிக்க (குடிக்க) வேண்டும் என்று தெரிகிறது.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications