3 லட்சம் டாலர் வழக்கு: ஜெ. மீதான விசாரணை தீவிரம்- சிபிஐ தகவல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் டாலர் பணம் அனுப்பப்பட்டது குறித்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனர் பி.சி.சர்மா கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது அவருக்கு வந்த 3 லட்சம் டாலர் பணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. மற்ற வழக்குகளைப் போலவே இதையும் கருதி விசாரித்து வருகிறோம். ஜெயலலிதா உள்பட வேறு எந்த முக்கிய வழக்கிலும் அரசியல் தலையீடு இல்லை.
சிபிஐ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கோரியுள்ளோம். தமிழ்நாடு இத்தகைய நீதிமன்றத்தை முதல் முறையாக அமைத்துள்ளது. இதன் மூலம் சிபிஐ தொடர்பான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும்.
இந்தியாவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும், இரண்டு முக்கிய நபர்களான பிரபாகரன் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரைப் பிடிக்க சர்வதேச போலீஸாரின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக இவர்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. ஆனாலும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
இருப்பினும் முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. சில நாடுகள் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால்தான் இந்த தாமதம் ஏற்படுகிறது என்றார் சர்மா.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications