ஜெவை பாராட்டி தீர்மானம்: சென்னை மாநகராட்சியில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கடும் மோதல்
சென்னை:
டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவரைப் பாராட்டி சென்னை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு கடும் அமளி ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும், மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிட நேரம் எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றும், ஜெயலலிதாவைப் பாராட்டியும் அதிமுக சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை திமுக கவுன்சிலர்கள் எதிர்த்தனர். இதனால் திமுக- அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பின்னர் தீர்மானத்தின் பேசவாவது தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரினர்.
ஆனால், துணை மேயர் கராத்தே தியாகராஜன் அனுமதி வழங்க மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.
அதிமுகவினரும் பதிலுக்கு கோஷமிட்டனர். ஒருவரை நோக்கி ஒருவர் திட்டிக் கொண்டனர். இதனால் அவை அமளி, துமளியானது. இதையடுத்து திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
இதன் பின்னர் ஜெயலலிதாவைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications