கள்ளச் சாராய சாவு 15 ஆக உயர்வு: 48 பேர் சீரியஸ்- பலர் பார்வையிழப்பு

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே விஷச் சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 48 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சென்னை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலருக்கும் பார்வை பறிபோயுள்ளது.

பொன்னேரி அருகே உள்ளது லட்சுமிபுரம். இப் பகுதியில் சமீப காலமாக கள்ளச்சாராய விற்பனை கொடி கட்டிப் பறந்து வருகிறது. இந் நிலையில் லட்சுமிபுரத்தைச் சுற்றியுள்ள பெருந்தெரு, லிங்கப்பையன்பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கள்ளச் சாராயம் குடித்துள்ளனர்.

குடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களில் சிலர் கண் எரிச்சல் ஏற்பட்டும், மயக்கமடைந்தும் சுருண்டு விழுந்தனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களில் மாரிமுத்து உள்ளிட்ட 4 பேர் இறந்தனர்.

மேலும் 48 உயிருக்குப் போராடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்றிரவு முதல் இன்று மாலை வரை 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள 48 பேரில் பலருக்கு பார்வை பறிபோயுள்ளது.

கள்ளச் சாராயத்தில் அதிக கிக்குக்காக மெத்தைல் ஆல்கஹால் அதிகளவில் கலக்கப்பட்டுள்ளது. இதுவே சாவுகளுக்குக் காரணம் என்று சென்னை அரசு மருத்துவமனை தலைவர் டாக்டர் கணபதி தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காத பொன்னேரி சப் இன்ஸ்பெக்டரை அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+