அரசு ஊழியர் விடுமுறைகள் 16 ஆக குறைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் பொது விடுறை நாட்கள் 16 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் 6 நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகின்றன. ஜனவரி 1ம் தேதி, ஆங்கிலப் புத்தாண்டுக்குக் கூட விடுமுறை இல்லை. இதனால் அடுத்த ஆண்டு மொத்தமே 10 நாள் தான் அரசு அலுவலகங்களுக்குப் பொது விடுமுறையாகும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு தற்போது 22 நாட்கள் பொது விடுமுறை நாட்களாக இருந்து வருகின்றன. இதை 16 நாட்களாகக் குறைத்து புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், 2004ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியிடப்படுள்ளது.

அதன் விவரம்:

பொங்கல், திருவள்ளுவர் தினம் (ஜன. 15, 16), குடியரசு தினம் (ஜன. 26), பக்ரீத் (பிப். 2), புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு (ஏப். 9, 14), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக. 15), கிருஷ்ண ஜெயந்தி (செப். 6), காந்தி ஜெயந்தி (அக். 2), ஆயுத பூஜை, விஜயதசமி (அக். 22, 23), தீபாவளி, ரம்ஜான் (நவ. 11, 15) மற்றும் கிறிஸ்துமஸ் (டிச. 25) ஆகியவை அடுத்த ஆண்டுக்கான பொது விடுறை நாட்களாகும்.

தற்போதுள்ள 29 நாள் மதச்சார்பு விடுப்பு அடுத்த ஆண்டு 35 நாட்களாக அதிகரிக்கப்படுகிறது. ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 3 நாட்கள் மதச்சார்பு விடுப்பு எடுக்க அனுமதி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+