டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெயலலிதாவுக்கு ஹரியாணா முதல்வர் ஆதரவு
சென்னை:
ரூ. 50 கோடிக்கு மேலான கட்டுமானத் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் உத்தரவுக்கு ஹரியாணா முதல்வர் ஓம் பிரகாஷ் செளதால எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா பூமி பூஜை நடத்த இருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி ரூ. 50 கோடிக்கு மேலான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு சில முதல்வர்கள் கடிதம் வந்தது என்று அக்னாலெட்ஜ்மென்ட் கடிதத்தை மட்டுமே பதிலாக அனுப்பியுள்ளனர்.
மற்றவர்கள் அதையும் அனுப்பவில்லை. இந் நிலையில் ஹரியாணா முதல்வர் செளதாலா ஜெயலலிதாவுக்குப் பதில் அனுப்பியுள்ளார்.
அதில், முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துக்களை தானும் பகிர்ந்து கொள்வதாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவு மாநில அதிகாரத்தைப் பறிப்பதாக உள்ளதாகவும் செளதாலா கூறியுள்ளார்.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த பிற்போக்கான உத்தரவுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications