திமுக கூட்டணியில் நீடிக்க பா.ஜ.க. விருப்பம்: மாறன் அஞ்சலி நிகழ்ச்சியில் இல.கணேசன் பேச்சு
சென்னை:
சென்னையில் நடந்த புகழாஞ்சலி நிகழ்ச்சியில், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு பல கட்சித் தலைவர்களும் புகழாரம் சூட்டினர். அவரது முழு உருவப் படத்தை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைத் தவிர தமிழகத்தின் அனைத்து எதிர் க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் மாறனின் முழு உருவப் படத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.
பின்னர் பா.ஜ.க. அகில இந்திய செயலாளர் இல.கணேசன் பேசுகையில், மாறன் உயிருடன் இருந்தபோது திமுகவையும், பா.ஜ.கவையும் ஒரே அணியில் கொண்டு வந்தார்.
இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையிலும் இந்த அஞ்சலி நிகழ்ச்சி மூலமாக பா.ஜ.கவையும் திமுகவையும் ஒரே மேடையில் அமரச் செய்திருக்கிறார். இந்த நிலை தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
மாறனின் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கு, திமுகவினருக்கு நம்மால் ஆறுதல் சொல்லிவிட முடியும். ஆனால், கருணாநிதிக்கு ஆறுதல் சொல்ல முடியாது. மாறனின் இழப்பு கருணாநிதிக்கு மிகப் பெரும் இழப்பு என்றார்.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், மூன்றாம் உலக நாடுகளின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் மாறன். தோஹா மாநாட்டில் அவர் ஆற்றிய உரை, ஐரோப்பிய நாடுகளின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது, இந்தியாவுக்கும், வளரும் நாடுகளுக்கும் பெருமளவில் உதவியது என்றார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், திராவிட இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பாதியை மாறன் புத்தகமாக எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் அது. அதன் தொடர்ச்சியை கருணாநிதி எழுத வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களில் ஒருவராக விளங்கியவர் மாறன். அதேபோல எம்.ஜி.ஆரும் மாறன் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார் என்றார்.
கருணாநிதி பேசுகையில், எனக்கு மாறன் செய்திருக்க வேண்டிய வேலையை (படத் திறப்பு, அஞ்சலி) நான் அவருக்கு இப்போது செய்து கொண்டிருக்கிறேன். கட்சியில் இருந்தபோது அவருக்காக நான் எத்தனையோ செய்துள்ளேன். அதற்குப் பிரதி உபகாரமாக, அவரது படத்தை திறக்க வைத்து என்னைத் தண்டித்து விட்டார் மாறன்.
கல்லூரியில் படித்தபோது, ஆங்கில மோகத்தை எதிர்த்து வகுப்புகளில் உள்ளேன் ஐயா என்றுதான் கூற வேண்டும் என்று சக மாணவர்களிடம் வலியுறுத்தியவர். உள்ளேன் ஐயா என்று கூறிய மாறன் இப்போது இல்லையே என்று நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.
மாறன் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன் என்ற செய்தியை உங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் குறித்த வரலாற்றின் இன்னொரு பாதியை நான் எழுதுவேன் என்றார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் தலைவர் வாசன், மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், மத்திய அமைச்சர் கண்ணப்பன், இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம் ஆகியோரும் பேசினர்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications