அரசு நிலத்தை சுருட்டிய பொன்முடி: ஊழல் தடுப்புப் போலீஸ் விசாரணை
சென்னை:
அரசு நிலத்தை ஆக்கிரமித்து தனது மாமியார் பெயரில் பங்களா கட்டியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பாக ஊழல் தடுப்புப் போலீஸார் பொன்முடியிடம் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்.
சைதாப்பேட்டையில் பிரபல டாக்டர் ஒருவர் தனக்குச் சொந்தமான 2 கிரவுண்ட் நிலத்தை அரசிடம் வழங்கினார். நில உச்ச வரம்புச் சட்டப்படி அவரால் இந்த நிலத்தை வைத்திருக்க முடியாது என்பதால் அதை அரசிடம் தந்தார்.
இந்த நிலத்தை ரேசன் கடைக்கு அரசு ஒதுக்கியதாகவும், அங்கு கண்ணப்பன் என்ற கூலித் தொழிலாளி குடிசை போட்டு வசித்து வந்ததாகவும் தெரிகிறது.
இந் நிலையில் கண்ணப்பனை விரட்டியடித்துவிட்டு, த்தை போலி ஆவணங்கள் தயார் செய்து அந்த நிலத்தை தனது மாமியார் சரஸ்வதி பெயரில் பொன்முடி வாங்கியதாக போலீசார் கூறுகின்றனர். ஏற்கனவே அவர் மீது சொத்துக் குவிப்பு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் ஊழல் தடுப்புப் போலீஸார் இந்த புதிய வழக்கையும் பதிவு செய்துள்ளனர்.
இந் நிலையில் பொன்டிமுயிடம் கடந்த சனிக்கிழமை ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவிட்டுச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
பொன்முடி சுருட்டியதாகக் கூறப்படும் இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 90 லட்சமாகும்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications