ஹைதராபாத்தில் ஜெ. கட்டும் சொகுசு பங்களா
ஹைதராபாத்:
ஹைதராபாத்தில் முதல்வர் ஜெயலலிதா 4 மாடி சொகுசு மாளிகையைக் கட்டத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜெயலலிதாவும், அவர் தோழி சசிகலாவும் கடந்த வாரம் ஓய்வெடுக்கும் பொருட்டு ஹைதராபாத் சென்றனர். ஜெயலலிதாவிற்கு ஹைதராபாத்தில் பேட் பஷீராபாத் என்னும் இடத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு உள்ளது.
இந்த பண்ணை வீட்டிற்கு அவர் ஓய்வெடுக்கச் செல்வது வழக்கம். இந்த பண்ணை வீட்டில் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன.
இந் நிலையில் எல்லாரெட்டி குடா என்னும் இடத்தில் 670 சதுர மீட்டர் பரப்பளவில் 4 மாடி நவீன சொகுசு மாளிகை ஓன்றைக் கட்டுவதற்கு மாநாகராட்சியிடம் ஜெயலலிதா அனுமதி கேட்டிருந்தார். ஹைதாராபாத் மாநாகராட்சியும் தற்குப ஓப்புதல் வழங்கிவிட்டதாக ஆந்திராவின் ஈநாடு பத்திரிக்கை தெரிவிக்கிறது.
சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஜெயலலிதா சந்தித்துப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை வந்து திரும்பிய சசிகலா:
இதற்கிடையே ஜெயலலிதாவுடன் ஹைதராபாத் சசிகலா நேற்று அவசரமாக சென்னை வந்தார். போயஸ் கார்டனில் தமிழக அமைச்சர்களை அழைத்து நீண்ட நேரம் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் அதன் பின்னர் மாலையே விமானம் மூலம் அவர் ஹைதராபாத் திரும்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது.
அவரது திடீர் வருகைக்கான காரணம் தெரியவில்லை. வரும் 7ம் தேதி வரை ஜெயலலிதாவும் சசிகலாவும் ஹைதராபாத்திலேயே இருப்பார்கள் என்று தெரிகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications