தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ வழக்கு டிசம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிளசன்ட் ஸ்டே ஹோட்டல்வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் வன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதில், தர்மபுரி அருகே, கோவை வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் வந்த பேருந்து தீவைத்து எரிக்கப்பட்டது.இந்த கொடூர சம்பவத்தில் 3 மாணவிகள் உயிருடன் கருகி பிணமாயினர்.
இது தொடர்பாக அதிமுகவினர் உள்ளிட்ட 31 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை முறையாகநடக்கவில்லை என்று கூறி பலியான மாணவிகளில் ஒருவரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இதையடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலிருந்து சேலம் நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்றி உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
இதன்படி சேலம் முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.நேற்று குற்றம் சாட்டப்பட்ட 31 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். காவல்துறை தரப்பில்,துணைக்கண்காணிப்பாளர் ரங்கசாமி, ஆய்வாளர் பெரியசாமி ஆகியோர் ஆஜராகினர்.
அனைவரையும் விசாரித்த பின்னர் வழக்கை வருகிற 10ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications