ரூ. 30,000 கோடி போலி முத்திரைத் தாள் மோசடி: தமிழக டாக்டருக்கும் தொடர்பு
சென்னை:
இந்தியாவையே கலங்கடித்துக் கொண்டிருக்கும் ரூ. 30,000 கோடி முத்திரைத் தாள் மோசடியில் தமிழகத்தைச்சேர்ந்த டாக்டர் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
கரன்சி மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடிக்கும் அரசுக்குச் சொந்தமான நாசிக் பிரஸ்சில் இருந்து இயந்திரங்களைவாங்கி போலி முத்திரைத் தாள்கள் அச்சடிக்கப்பட்டு ரூ. 30,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.
இதில் முக்கியக் குற்றவாளியான அப்துல் கரீம் தெல்கி கைது செய்யப்பட்டுள்ளான். முன்னதாக இவனைக் கைதுசெய்யாமல் அவனைக் காப்பாற்றி வந்த மும்பை போலீஸ் கமிஷ்னர் சர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி முத்திரைத் தாள்களை அச்சிட்டு 14 மாநிலங்களில் தெல்கி விற்றிருந்தாலும் கர்நாடகம், மகாராஷ்டிரம்ஆகிய மாநிலங்களில் தான் போலி முத்திரைத் தாள் மோசடி பெரும் அளவில் நடந்துள்ளது. இதில் பலஅரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதும் தெரியவந்துள்ளது.
இந் நிலையில் சென்னையிலும் போலி முத்திரைத் தாள்கள் உலா வருவதைக் கண்டறிந்த சிபிசிஐடி போலீசார் ரகசியவிசாரணையில் இறங்கியுள்ளனர். இதில் அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் நிஜாமூதீன் என்பவர் உள்பட 6 பேர்சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போலி முத்திரைத் தாள்களை கர்நாடகத்தில் இருந்து வாங்கியதாகத்தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பலுக்கும் தெல்கிக்கும் நேரடித் தொடர்பு இருப்பதும் உறுதியாகியுள்ளது.
இதையடுத்து போலி முத்திரைத் தாள் விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐயிடம் டாக்டர் நிஜாமூதீனைஒப்படைக்க தமிழக சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பணம் மற்றும் முத்திரைத் தாள்களை அச்சடிக்கும் இயந்திரங்களை அரசுக்குச் சொந்தமான பிரஸ்ஸில் இருந்தேதெல்கி வாங்கியுள்ளான். அவனுக்கு இந்த இயந்திரங்கள் வழங்கப்பட்டதில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளஅரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்குத் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications