ஜெ. அரசு மீது நடவடிக்கை கோருகிறார் கருணாநிதி: வாஜ்பாயிடம் திமுக எம்.பி.க்கள் கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கு விசாரணை தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளதால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி,திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தை திமுக எம்.பி.க்கள் இன்று நேரில் பிரதமர் வாஜ்பாயிடம் அளித்தனர்.

கடந்த வாரம் தான் இந்த விஷயம் தொடர்பாக தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவை திமுக குழு சந்தித்தது.வழக்கை சரியாக நடத்தாத அரசு தரப்பு வழக்கறிஞரை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரியது.

அப்போது இதில் நான் என்ன செய்ய முடியும் என ஆளுநர் கேட்டதாகவும், அதற்கு பதிலளித்த திமுக பொதுசெயலாளர் அன்பழகன், இந்த வழக்கு விசாரணை தனிக் கோர்ட்டில் நடந்தபோது எப்படியெல்லாம் அரசுகுளறுபடி செய்தது என்பதையும், தவறு செய்த அரசு வழக்கறிஞரை நீக்குமாறு மாநில அரசை வற்புறுத்தலாம்என்பதை மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்ப உங்களுக்கு அதிகாரம் உள்ளதே என்று இடித்துரைத்து விட்டுவந்ததாகவும் தெரிகிறது.

இந்த வழக்கு விசாரணை இப்போது பெங்களூருக்கு மாற்றப்பட்டு நிலையில், ஜெயலலிதாவை உச்ச நீதிமன்றம்கண்டித்ததை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருணாநிதி எழுதிய கடிதத்தை திமுகஅமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ராஜா மற்றும் எம்.பி.க்கள் வாஜ்பாயை நேரில் சந்தித்து கொடுத்தனர்.

அந்தக் கடிதத்தில்,

வருமானத்தை மீறி சொத்து சேர்த்த வழக்கை சென்னை தனி நீதிமன்றத்திலிருந்து கர்நாடகத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு சென்னையில் விசாரிக்கப்பட்ட விதம் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.அரசுத் தரப்பு சாட்சியங்கள் 76 பேர் முரண்பாடாக சாட்சியம் அளித்ததையும், அதை குறுக்கு விசாரணை செய்யாதஅரசு வக்கீலின் போக்கையும் நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.

இவரே ஜெ, மீதான அனைத்து வழக்குகளுக்கும் அரசு தரப்பு வழக்கறிஞராக நீடித்தால் அந்த வழக்குகளின்நிலையும் இதே போல் ஆகும். எனவே அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அரசு வழக்கறிஞராகநியமிக்கவேண்டும்.

மேலும், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது நீதித்துறையில் அரசின்தலையீடு இருப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு மீது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கருணாநிதி கோரியுள்ளார்.

பொடா விவகாரத்தை வைத்து பா.ஜ.கவுக்கு நெருக்கடி தந்து வரும் திமுக இப்போது ஜெயலலிதா விவகாரத்தையும்கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+