பம்முகிறது பா.ஜ.க.: திமுக உறவை சீர் செய்ய முயற்சி
சென்னை:
நேற்று வரை திமுகவையும் அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துப் பார்க்கிறோம் என்று பேசி வந்த பா.ஜ.கவின்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவோடுபோய், எப்படி அதிமுகவை இணைந்துப் பார்க்க முடியும், இந்தஇரு கட்சிகளையும் எப்படி எங்களால் சமமாகப் பாவிக்க முடியும் என்று புதிய பல்லவி பாட ஆரம்பித்துள்ளபா.ஜ.க.
சமீபத்தில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முக்கிய தலைவர்கள் பலரும் பா.ஜ.கவுடனானஉறவை முறிக்குமாறு கருணாநிதிக்கு யோசனை கூறியுள்ளனர். இதனால் அக் கட்சியுடனான உறவைமறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு கருணாநிதி வந்துவிட்டதை பா.ஜ.க. தலைமை உணர்ந்து கொண்டுள்ளது.
பிரதமர் பதவிக் கனவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களிலும்அதிமுக வேட்பாளர்களையே நிறுத்த முடிவு செய்துள்ளதால் திமுக கூட்டணியைவிட்டால் வேறு வழியில்லை என்றநிலைக்கு பா.ஜ.க. தள்ளப்பட்டுளளது.
இதையடுத்து திமுகவுடனான உறவை எக் காரணம் கொண்டும் மாநில பா.ஜ.கவினர் கெடுக்கக் கூடாது என்றும்,உறவைத் தொடர்வது குறித்து நானே கருணாநிதியுடன் நேரடியாகப் பேசிக் கொள்வேன் என்றும் பிரதமர்வாஜ்பாய், கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு மூலமாக மாநில பா.ஜ.க. நிர்வாகிகளிடம் கூறிவிட்டதாகத்தெரிகிறது.
கருணாநிதியை சமீபத்தில் சந்தித்த நாயுடு இதை அவரிடம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இதையடுத்தே பா.ஜ.க. மாநில நிர்வாகிகளின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க. பொதுச் செயலாளரும் இதுவரை அதிமுக ஆதரவாளராக இருந்தவருமான எச்.ராஜா இன்று சென்னையில்நிருபர்களிடம் பேசுகையில்,
திமுக தான் எங்களுடன் மத்தியில் கூட்டணியில் இருக்கிறது. அதிமுக எங்களின் எதிர்க் கட்சியாக உள்ளது. அப்படிஇருக்கையில் இரு கட்சிகளையும் ஒரே மாதிரியாகப் பார்ப்பதும், பாவிப்பதும் சாத்தியமில்லை.
1999ம் ஆண்டில் வாஜ்பாய் அரசை அதிமுக கவிழ்த்த பிறகு இதுவரை அந்தக் கட்சியுடன் சேர்ந்து நாங்கள் மேடைஏறியதே இல்லை. இதனால் அதிமுகவுக்கு நாங்கள் நெருக்கமாக இருக்கிறோம் என்று சொல்வதே தவறானது.
திமுகவைவிட அதிமுகவுடன் தான் பா.ஜ.க. நெருக்கம் காட்டுவதாகச் சொல்வது பத்திரிக்கைகள் ஏற்படுத்தியபிரமை தான்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து கட்சித் தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் முழுமையாகக்கட்டுப்படுவோம்.
அதே நேரத்தில் தமிழகத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி நீடிப்பது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதிதான் இறுதிமுடிவெடுக்க வேண்டும்.
வட மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள படுதோல்வி, அக்கட்சிக்கு சோனியா காந்தியால்தலைமை வகிக்க முடியாது என்பதையே காட்டுகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் வாஜ்பாய் மீதுசோனியா காந்தி கூறிய புகார்களை மக்கள் ஏற்கவில்லை என்பது நிரூபனமாகியுள்ளது என்றார்.
மேலும் வைகோ விஷயத்தில் தனது அதிகாரத்துக்கு உட்பட்டே பொடா மறு ஆய்வுக் குழு தமிழக அரசுக்குநோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நோட்டீஸ் அனுப்பியதே தவறு என்று ஆட்சேபம் செய்யும் தமிழக அரசின்செயல் தான் தவறானது என்றார்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு












Click it and Unblock the Notifications